கல்வித்துறையில் ஊழல் நடந்தால் எப்படி சும்மா இருக்க முடியும்.. விஜய் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வித்துறையில் ஊழல் நடந்தால் எப்படி சும்மா இருக்க முடியும் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார். கோவை பெரியார் அறிவுலகத்தில் இப்படி ஒரு முறைகேடு நடைபெற்று இருப்பது வெளியில் வருது.. இன்னும் மற்ற நூலகத்தில் எல்லாம் என்ன என்ன நடந்து இருக்கோ.. ஒன்னு ஒன்னா வெளில வரும். இது என்ன அறிவுலகமா? ஊழல் உலகமா? என்று தெரியவில்லை என விஜய் பேசியுள்ளார்.

பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது வழங்கப்பட்டுகிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழா நீலாங்கரையில் நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் பேசியதாவது:-

TVK Education Awards

பேஸ்மெண்ட்டே ஆடிப்போய் கிடக்கிறது

ஊழல் என்பது பழசான ஒரு விஷயம்தான். மக்கள் அதற்கு பழகி போய்விட்டார்கள் என்று கடந்து போக முடியாது. ஏனென்றால் அது தொடர் நோய் போன்றது. அதை குணப்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்துதான் ஆக வேண்டும். இதெல்லாம் சரி செய்ய முடியுமா என்று லாஜிக்காக கேட்பாகள்.

குறைந்தபட்சம் அதை கட்டுப்படுத்தலாம் அல்லவா.. குறைந்தபட்சம் அதற்கான முயற்சிகள் எடுக்கலாம் அல்லவா? அப்படி நான் எடுத்த சில நடவடிக்கைகளால்தான் சில பேருடைய பேஸ்மெண்ட்டே ஆடிப்போய் கிடக்கிறது. அது இங்கே வேண்டாம்.. சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஊழல் பற்றி எல்லோரும் கேள்வி பட்டு இருப்பீர்கள். செய்திகளில் பார்த்து இருப்பீங்க..

கல்வித்துறையிலேயே ஊழல்

மற்ற துறையில் எதாவது ஒரு ஊழல் நடைபெற்றது என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம். அதன்பிறகு நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும். ஆனால் கல்வித்துறையிலேயே ஊழல் நடைபெறுகிறது என்று சொன்னால் அதை எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்.

மற்ற துறையில் தப்பு நடைபெற்றால் பரவாயில்லையா? என்று சில அறிவார்ந்தவர்கள் கேட்பார்கள். எல்லாத் துறையும் முக்கியம்தான். எந்த துறையில் தப்பு நடைபெற்றாலும் தப்பு தப்புதான். ஆனால் ஒரு கல்வித்துறையில்.. கல்வித்துறைதானே எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை. நம்ம பசங்களுக்கு பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் விட முக்கியம் அவுங்கதானே..

எப்படிங்க பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்

வரும்கால தலைமுறையே அவுங்கதானே.. பள்ளி பாதுகாப்பில் எல்லாம் சும்மா விளையாடி இருக்காங்க.. அதுல வந்த விஷயம்தான் கும்பகோணம் பள்ளி விவகாரம். அதையேதான் இவுங்களும் தொடர்ந்து வந்து இருக்கிறார்கள். அதே ஊழல், எப்படிங்க பார்த்துட்டு சும்மா இருக்க முடியும். அப்ப கூட நான் என்ன சொன்னேன் என்றால் என் டேபிளில் மூன்று பைல் இருக்கு என்றுதான் சொன்னேன்.

உடனே எதிர்க்கட்சியில் இருந்து சவுண்ட்.. அதென்ன பைல் இருக்காமே.. பைல் இருக்காமே. திறங்களேன். திறந்துதான் பாருங்களேன். யாரு நம்ம.. அய்யோ வந்துட்டாரே கலாய்ப்பாரே அவரு.. நானே சட்டமன்றத்தில் கை கட்டி அமைதியாக உக்காந்து இருப்பேன். அவுங்களே ஆசைப்பட்டு கேக்குறாங்க வேற என்ன பண்ணுறது. சரி திறங்க சார்.. வேற என்ன பண்ணுறது..

ஏஐ வைத்து ஊழல்

பசங்க படிக்கிற நூலக புக்ஸ்ல கூட.. அதுல கூடவா.. நானும் சரி ஏஐ டெக்னாலஜி வந்து இருக்கு.. பயங்கரமாக டெவலப் வரப்போகுது என்று ஆசையாக எதிர்பார்ப்போட இருந்தால் அதே ஏஐ வைத்துக்கொண்டு இப்படி ஆரம்ப காலத்தில் இப்படி ஒரு ஊழல் செய்து இருக்கிறார்கள் என்றால் என்ன பண்ணுறதுன்னே தெரியல..

கோவை பெரியார் அறிவுலகம், திருச்சி காமராஜர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், நெல்லை காயிதெ மில்லத் அறிவுலகம், கடலூர் அஞ்சலை அம்மாள் நூலகம். இதெல்லாம் பசங்க நீங்க படிப்பதற்கான நூலகம். அதுல கோவை பெரியார் அறிவுலகத்தில் இப்படி ஒரு முறைகேடு நடைபெற்று இருப்பது வெளியில் வருது.. இன்னும் மற்ற நூலகத்தில் எல்லாம் என்ன என்ன நடந்து இருக்கோ.. வரும் ஒன்னு ஒன்னா வெளில வரும். இது என்ன அறிவுலகமா? ஊழல் உலகமா? என்று தெரியவில்லை" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+