பொது வேட்பாளர்னு யார் சொன்னது? எத்தனை தடவை தோற்றாலும் ஆதரவு கேட்க மாட்டேன்! போட்டு உடைத்த சீமான்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நான் பொது வேட்பாளர்னு யார் சொன்னது? அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் பொது வேட்பாளர் என திமுக சொன்னதா? இல்லை அதிமுக சொன்னதா? எத்தனை தடவை தோற்றாலும் நான் யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மேலும், நானாக இருந்தால் திருப்பரங்குன்றம் பிரச்சினையை அரை மணி நேரத்தில் தீர்த்து இருப்பேன்.. பிரச்சினைக்கான வேர் எது? பிரச்சினைக்கான தீர்வு எது? என்று தெரியாதவரிடம் நாடு இருக்கு? என்ன செய்யுறது? என்றும் கூறியுள்ளார்.

நெல்லையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழர் எழுச்சி நாள் விழா நடந்தது. இதில் கலந்துகொன்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

Seeman

அரை மணி நேரத்தில் தீர்த்துவிடுவேன்

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து சீமான் ஏன் பேசவில்லை என்கிறார்கள். ஏன் பேசவில்லை.. ஏன் பேசவில்லை என சொல்லுறாங்க.. அட டேய், நான் பேசும் போது நீங்கள் எல்லாம் எங்கடா போயிருந்தீங்க.. அரை நொடியில், அரை மணி நேரத்தில் அந்த பிரச்சினையை தீர்த்து இருப்பேன். கொடுமை.

இப்போ என்னவென்றால் இது அடுத்த ஆன்டு பிரச்சினை வரும். அதற்கு அடுத்த ஆண்டு பிரச்சினை வரும். இப்படியோ தொடரும். ஆனால் இந்த பிரச்சினையை எங்கிட்ட கொடுத்தால் அரை மணி நேரம், ஒரு மணி நேரத்தில் முடிஞ்சிடும். என்ன இருக்கு? பிரச்சினைக்கான வேர் எது? பிரச்சினைக்கான தீர்வு எது? என்று தெரியாதவரிடம் நாடு இருக்கு? என்ன செய்யுறது?

ஏன் தோற்றுக்கொன்டே இருக்கிறேன்?

இப்போ இப்படி பேசுனதற்கு வருவாய்ங்க பாருங்க.. திருடன்.. திரள்நிதி என்று பேசுவார்கள்.. திரள்நிதி திருடன்னு சொல்லுவான்.. நான் கேட்கிறேன், நீ துட்டு கொடுத்தியாடா?.. இன்னொன்னு என்னிடம் கேள்வி கேப்பாங்க.. தொடர்ந்து நீங்க போராடி தோற்றுப் போனீர்களே என்று? டேய் தோற்றுப் போனது நான் இல்லையடா நீ.. இந்த கேள்வியை கேட்கிறீயே நீ.. தோற்றதற்கு காரணம் நான் இல்லை காரணம் நீதான். ஏனென்றால் நீ எனக்கு ஓட்டு போடவில்லை அதனால்..

உன்னை மாதிரி ஆள் இருந்தால் தோற்காமல் என்ன பண்ணுறது. மக்களின் தோல்வி. மாற்றம் என்றால் எது மாற்றம். நீங்கள் விரும்பிய மாற்றம் இது தானா.. 2000-இல் இருந்து 2500.. 3 சிலிண்டரில் இருந்து 6 சிலிண்டர். இது தான் மாற்றமா.. தினமும் கொலை நடக்குது.. போலீஸ்காரர்களையே கஞ்சா போட்டுக்கொன்டு வெட்டுகிறார்கள். போலீஸ்கே பாதுகாப்பு இல்லையென்றால் பெண் பிள்ளைகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?

நான் பொது வேட்பாளர் என திமுக சொன்னதா?

அம்பாசமுத்திரத்தில் நான் பொது வேட்பாளர் என்று திமுக சொன்னதா?.. திமுகவின் தலைமை சொன்னதா?.. அதிமுகவின் தலைமை என்னை பொதுவேட்பாளர் என சொன்னதா?.. இல்லை நான் தான் பொதுவேட்பாளர் என சொன்னேனா? நீங்க (டிவிகே) தான் சொல்றீங்க..

ஏன் இப்படி கதறுகிறீர்கள்.. எத்தனை தொகுதி இருக்கிறது.. ஏன் அம்பாசமுத்திரத்தில் மட்டும் கதறுகிறீர்கள்.. ஏன் என்றால் அங்கே நான் போட்டி போடுகிறேன் என்பதால் தான். பொது வேட்பாளர்னு யார் சொன்னது? நீங்க தான் சொல்றீங்க.. எத்தனை தடவை தோற்றாலும் யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன்.. என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+