பாங்காக்கில் பயங்கர வெடிப்பு.. எண்ணெய் கிடங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீ! மக்கள் வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கொழுந்துவிட்டு எரியும் தீ காரணமாக அங்கு வானத்தை மறைக்கும் அளவுக்கு கரும்புகை எழுந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணெய் கிடங்குக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் நாடுகளில் ஒன்று தாய்லாந்து. தெற்காசியாவில் அமைந்துள்ள தாய்லாந்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இந்தியர்கள் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செல்கிறார்கள். அந்த தாய்லாந்தில் தான் இப்போது மோசமான ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது..

Thailand Bangkok Oil Depot Explosion Bangkok

பயங்கர வெடிப்பு

அதன் தலைநகர் பாங்காக்கில் உள்ள எண்ணெய் கிடங்கில் திடீரென பயங்கர வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு மிக பெரியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியும் தீ காரணமாக வானத்தை மறைக்கும் அளவுக்கு கரும்புகை எழுந்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணெய் கிடங்கு அருகே உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்..

பாங்காக்கின் பாங் நா என்ற பகுதியில் உள்ள பாங்சாக் எண்ணெய் கிடங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எண்ணெய் கிடங்கில் முதலில் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதை தொடர்ந்து தீ மளமளவென பரவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் இருந்து தீப்பிழம்புகள் உயரமாக எழுந்துள்ளது. அதை தொடர்ந்து அடர்த்தியான கரும்புகை பாங்காக் நகரை சூழும் அளவுக்கு பரவி வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

பரபரப்பு

இந்த பரபரப்பை காட்டும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து, பாங் நா பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், "பாங்சாக் எண்ணெய் கிடங்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அருகில் வசிப்பவர்கள் உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியேற்றம்

எண்ணெய் கிடங்குக்கு அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே தீயணைப்பு படையினரும் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அப்பகுதி மக்கள் எண்ணெய் கிடங்கு இருக்கும் இடத்துக்கு செல்வதை தவிர்க்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பாங்காக்

பாங்காக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பெரிய எண்ணெய் கிடங்கு, தாய்லாந்தின் முன்னணி எரிசக்தி நிறுவனமான பாங்சாக் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெடிப்புக்கான காரணம், தீ விபத்தின் சேதங்கள் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு ஒரு நாளைக்கு 1.2 லட்சம் பீப்பாய்கள் வரை கையாள முடியுமாம். இது தாய்லாந்தின் ஐந்தாவது பெரிய வளாகமாக உள்ளது. மேலும், அங்கு நகர்ப்புற பகுதியிலேயே அமைந்துள்ள ஒரே வளாகமாகவும் திகழ்கிறது. இதன் காரணமாகவே பரபரப்பான சூழல் அங்கு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+