திருப்பரங்குன்றம் விவகாரம்! அது தீபத்தூண் இல்லைனு சொல்லியும் ஏன் பெரிசு பண்றீங்க? திருமாவளவன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அது தீபத்தூண் இல்லை, கோயில் நிர்வாகவே உண்மையைக் கூறிய பிறகும் இந்து அமைப்புகள் இதனை பெரிதாக்கி பிரச்சனை செய்து வருகிறார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் தேசிய அரசியலமைப்பு சட்ட நாளை முன்னிட்டு அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியானது திருமாவளவன் தலைமையில் நடந்தது.

Thirumavalavan

இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு, டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இந்திய அரசியலமைப்பின் மாண்பையும், அதன் அடிப்படைக் கொள்கைகளையும் பாதுகாக்கும் வகையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன்,
நவம்பர் 24 இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேசிய சட்டமாக இயற்றப்பட்டு ஒன்றிய அரசும் இதை கடைபிடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதனை அறிவித்தது பாஜக அரசு தான் என்றாலும், அதன் உரிமைகளை சிதைக்கிற வேலைகளை இந்த அரசு ஈடுபட்ட வருவது நீர் முரணாக இருக்கிறது. இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகள் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க முன்வர வேண்டும். அதன் மூலம் சுதந்திர இந்தியாவை பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

வரும் 28ம் தேதி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி மறுவரையறை கூடாது. புதிய நாடாளுமன்றத்தின் வரையறியை முயற்சியை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி விசிக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

திருப்பரங்குன்றத்தில் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கோவில் நிர்வாகம் கையில் தான் அது உள்ளது. முன்பு நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் வித்தியாசம் இதுதான்.

முருகர் என்ற பெயரில் மதவாத சக்திகள் உள்ளே நுழைந்து கலவரம் செய்யக் கூடாது என்ற நோக்கோடுதான் கோவில் நிர்வாகம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபமேற்றியது. ஆரம்பத்தில் இருந்தே தீபத்தூணில் தீபம் ஏற்றிய வரலாறு இல்லை. அது தீபத்தோன் இல்லை என்று திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறார்கள். கோவில் நிர்வாகமே அது தீபத்தூண் இல்லை என கூறிய பிறகு, மதவாத சக்திகள் அதை பெரிதாக்கி பிரச்சனை செய்து வருகிறது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+