திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகை காணிக்கை வழங்கிய தமிழர்! யார் இந்த வர்தமான் ஜெயின்?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ 160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய தமிழக பக்தர் வர்தமான் ஜெயின் யார் என்பது குறித்தும் அவரது பின்னணி குறித்தும் பார்க்கலாம்.

உலக புகழ்பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அது போல் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

இந்த கோயிலுக்கு ஏராளமானோர் நன்கொடைகளையும் கொடுக்கிறார்கள். பணம், நகை, தங்கம், வைரம், வெள்ளி, நிலங்கள், சொத்து பத்திரம் என கொடுப்பதுண்டு. இதனால் இந்தியாவில் அதிக வருவாயை ஈட்டும் கோயில் நிர்வாகத்தில் திருப்பதி தேவஸ்தானமும் ஒன்றாகும்.

Vardhaman Jain

தமிழர்

அந்த வகையில் தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ 160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க நகைகளை பெட்டி பெட்டியாக கொண்டு போய் காணிக்கையாக வழங்கினார்.

இந்த தங்க நகை ஆபரணங்கள் 9 தொகுப்புகளாக 45 வகையான நகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏழுமலையானுக்கு தனி நபர் ஒருவர் இத்தனை பெரிய காணிக்கை கொடுத்துள்ளது குறித்து பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

Vardhaman Jain

காணிக்கை வழங்கிய சென்னை பக்தர்

காணிக்கையாக வழங்கிய பக்தர் சென்னையை சேர்ந்த வர்தமான் ஜெயின் ஆவார். அவர் யார் என்பதை பார்க்கலாம். சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் துறையில் பயின்றார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கணினி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். Dell நிறுவனத்தின் BPO பிரிவின் மேலாண்மை பிரிவு இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

Vardhaman Jain

அமெரிக்காவை சேர்ந்தவர்

அமெரிக்காவில் உள்ள Access Health Care என்ற மெடிக்கல் பில்லிங் உள்ளிட்ட தொழில்நுட்பச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை தொடங்கினார். இவர் என்ஆர்ஐ.

கடந்த ஆண்டு அவரது நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை ரூ 18,524 கோடிக்கு விற்பனை செய்தார். இந்த நிதியைத்தான் பல்வேறு ஆன்மீக செயல்பாடுகளுக்கு அவர் பயன்படுத்தி வருகிறார்.

கட்டுமான நிறுவனம்

ஏசியா சென்னை என்ஜினியரிங் என்ற கட்டுமான நிறுவனத்தையும் நிறுவியுள்ளார். தொடர்ந்து ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு காணிக்கைகளை வழங்கியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அவர் ஏழுமலையானுக்கு நன்கொடை அளித்து வருகிறாராம். திருமலைக்கு மின்சார பேருந்துகளை வாங்க ரூ 5 கோடியும், கோசாலையில் கால்நடைகளுக்கு தீவனங்களை கலக்கும் ஆலை அமைத்துத் தர சில கோடிகளையும் கொடுத்துள்ளார்.

Vardhaman Jain

திருப்பதிக்கு நிறைய காணிக்கைகள்

ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு ரூ 7கோடி நன்கொடையை வழங்கியுள்ளார். உண்டியல் காணிக்கைகளை எண்ணுவதற்கு 1 கோடி மதிப்பிலான நாணயங்களை வரிசைப்படுத்தும் இயந்திரம் வழங்கியுள்ளார். காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலராகவும் இருக்கிறார்.

121 கிலோவில் என்னென்ன இருக்கு?

இவ்வாறு அவர் பல்வேறு நற்பணிகளை செய்து வந்த நிலையில் தற்போது 121 கிலோ நகைகளை மூலவருக்கு காணிக்கையாக கொடுத்துள்ளார். இந்த நகைகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் வழங்கினார். அதில் ஸ்ரீவாரிக்கு கிரீடம், பாதம், இடுப்பு பட்டை, தோள் பட்டை, சங்கு, சக்கரம் உள்ளிட்ட உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏழுமலையானை அலங்கரிக்கக் கூடிய நகைகள் இடம் பெற்றுள்ளன.

Vardhaman Jain

ஜிஆர்டி தயாரித்த நகைகள்

இந்த நகைகள் சென்னையைச் சேர்ந்த ஜிஆர்டி நகைக் கடையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இவை பலத்த பாதுகாப்புடன் திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த ஆபரணங்களை பார்வைக்கு வைக்க ரங்கராயர் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+