ஆபாச மெசேஜ்! கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வீட்டில் போலீஸார் திடீர் குவிப்பு! கைதாகிறாரா அருள் விக்னேஷ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு சிறப்பு காவல் படை போலீஸார் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, அவரது முகாம் அலுவலகத்திற்கு மதுபோதையில் சென்றது என்பன உள்ளிட்ட புகார்களின் கீழ் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Kallakurichi MLA Arul Vignesh

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையை ஐஜி காமினி மேற்பார்வையிடுவார். இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்றைய தினம் கச்சிராயப்பாளையத்தில் உள்ள அருள் விக்னேஷின் வீட்டிற்கு மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி சம்மன் அளித்திருந்தார்.

அதன் பேரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி வந்த விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், பெண் ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டிருந்தார். அது போல் இன்றை தினம் தொடர்ந்து 2ஆவது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

அது போல் அருள் விக்னேஷிடம் 3ஆவது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் அருள் விக்னேஷ் வீட்டிற்கு போலீஸார் வருகை தந்தனர். கட்சி நிர்வாகிகளும் குவிந்தனர். கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்ற நீதிபதி சுவாதி அழகப்பனை சந்தித்து விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் காலை 4 போலீஸார் மட்டும் இருந்த நிலையில் தற்போது சிறப்பு காவல் படையினர் குவிந்துள்ளனர். எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது அருள் விக்னேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+