ஜெய்ஸ்வால் + ஆர்ச்சர்.. டீல் பேசிய மும்பை அணி.. ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன ராஜஸ்தான் அணி!
மும்பை: ஹர்திக் பாண்டியாவை டிரேட்டில் விட்டுக் கொடுக்க ராஜஸ்தான் அணியிடம் மும்பை அணி நிர்வாகம் முன் வைத்த டிமாண்ட் பேசுபொருளாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஆர்ச்சர் ஆகிய இரு வீரர்களையும் விட்டுக் கொடுத்தால் மட்டுமே, ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்வோம் என்று மும்பை அணி கூறியுள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி டிரேட் பேச்சுவார்த்தையில் இருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் நடக்க உள்ளது. இதனிடையே மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, பஞ்சாப் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங், மும்பை அணிக்கு டிரேட் செய்யப்பட்டுவிட்டார். இது இரு அணிகளுக்கும் உற்சாகத்தை கொடுத்தது.

ஹர்திக் பாண்டியாவை வாங்க கேகேஆர், ராஜஸ்தான், டெல்லி மற்றும் சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் தீவிரமாக இருந்தன. ஆனால் திடீரென கடைசி நேரத்தில் உள்ளே புகுந்த பஞ்சாப் அணி, அர்ஷ்தீப் சிங் மூலமாக காரியத்தை சாதித்துவிட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணியிடம் மும்பை அணி நடத்திய பேச்சுவார்த்தை ரகசியங்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக மும்பை அணி தரப்பில் 2 வீரர்களை கேட்டு டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் அணி நேரடியாக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை டிரேட் செய்ய முன் வந்துள்ளது. ஆனால் மும்பை அணி நிர்வாகம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமல்லாமல், ஆர்ச்சரும் வேண்டும் என்று பேசியுள்ளனர்.
கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்தவர் ஆர்ச்சர். இதனால் ராஜஸ்தான் அணி டிரேட் பேச்சுவார்த்தையில் இருந்து உடனடியாக பின் வாங்கி இருக்கிறது. பும்ரா - ஆர்ச்சர் கூட்டணியை வைத்து மும்பை அணி கோப்பையை வெல்ல முடியும் என்று கணித்துள்ளது. அந்த திட்டத்தை ராஜஸ்தான் அணி கலைத்துவிட்டது.
மும்பை அணியின் டிமாண்ட்டை நிராகரித்த ராஜஸ்தான் அணி, வேறு பக்கம் டிரேட் பேச்சுவார்த்தையை தொடங்கியது. அதற்கேற்ப சாம் கரணை விட்டுக் கொடுத்துவிட்டு முகமது ஷமி மற்றும் சித்தார்த் ஆகியோரை வாங்கிவிட்டது. இதனால் மும்பை அணி பல்வேறு அணிகளிடமும் மிகப்பெரிய டிமாண்ட்டை வைத்து, அது வேலைக்கு ஆகாததால் அர்ஷ்தீப் சிங்கை மட்டும் வாங்கியது தெரிய வந்துள்ளது.



Click it and Unblock the Notifications
