விஜய்யை நடிகராக தான் தெரியும்! அரசியல் பேசினால் ஏற்று கொள்ளும் பக்குவம் இல்லை.. விஜய் சேதுபதி பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரை பற்றி யார் என்ன பேசினாலும், அது ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதமாக மாறிவிடுகிறது. குறிப்பாக இப்போது விஜய் தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கும் நிலையில், அவரைப்பற்றி விமர்சனங்கள் அரசியல் ரீதியாக பார்க்கப்படுகின்றன.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துக்கள் கூட முதல்வர் விஜய்யை விமர்சிப்பதாக புரிந்து கொள்ளப்பட்டு, ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில் தான் தற்போது விஜய் சேதுபதி ஒரு பேட்டி ஒன்றில் பேசும்போது தவெக ஆட்சி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்க, அதற்கு அவர் அரசியல் விமர்சனங்களை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து அவர் தனது கருத்தை சொல்லி இருக்கிறார்.

Vijay Sethupathi

விஜய் சேதுபதி பேட்டி

விஜய் சேதுபதி பேசும்போது, "விஜய் சாரை எனக்கு நடிகராக தெரியும். அவருடன் வேலை செய்து இருக்கிறேன். ஆனால் அரசியல் என்பது அவர்கள் போடும் திட்டங்களும், அதை செயல்படுத்துவதும் தான். அதை உட்கார்ந்து பார்ப்பது எனது வேலை இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அரசியல் கருத்து பேசுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் அதை நாகரிகமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பலருக்கும் இல்லை, அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி. அது போல் ஒரு விஷயத்தை முழுமையாக தெரிந்து கொண்டு அதை தொடர்ந்து கவனித்து வர வேண்டும். முழுமையாக தெரியாமல் பொதுவாக கருத்துக்களை தெரிவிப்பதால் எந்த பலனும் இல்லை" என்று பேசி இருக்கிறார்.

விஜய் பற்றி பதில்

மேலும், விஜய்யை ஒரு நடிகராக மட்டுமே பார்த்திருக்கிறேன், அவர் இப்போது அரசியலில் என்ன செய்கிறார் என்பதை விமர்சிப்பதோ, உட்கார்ந்து கவனிப்பதோ எனது வேலை கிடையாது என்பதை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் அரசியல் பற்றி பேசவே கூடாது என்று தான் நினைக்கவில்லை என்றும், ஒரு விஷயத்தை பேசும் போது அதை முழுமையாக தெரிந்துகொண்டு பேச வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

விஜய் சேதுபதி செய்யும் உதவிகள்

அதேபோல, "நான் அரசியலுக்கு வருவேனா என்பது பற்றி எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதுதான். என்னால் முடிந்த வரைக்கும் நான் சேவை செய்து கொண்டிருக்கிறேன். இப்போது கூட லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். என் நண்பன் ஒருவருடன் சேர்ந்து குறைந்த விலைக்கு துணிகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

குளங்களை தூர் வாருவதற்கு உதவி செய்து இருக்கிறேன். பலருக்கு படிப்புக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன். இதுவே எனக்கு பெரிய மன நிறைவு தெரிகிறது. இது எல்லாமே என்னுடைய சொந்த காசுல தான் நான் செய்கிறேன்" என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

இப்போது டிரெயின் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதன் பிரமோஷன் பேட்டிகளில் விஜய் சேதுபதி பிஸியாக இருக்கிறார். அந்த நேரத்தில் முதல்வரின் ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அரசியல் விவாதத்தில் தன்னை இழுத்துக்கொள்ளாமல், அவர் கொடுத்த பதில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அரசியல் கருத்து பேசுவது தவறு இல்லை, ஆனால் அந்த கருத்தை முழுமையாக புரிந்து கொண்டு பேசுவது, மற்றவர்களின் கருத்தை நாகரீகமாக ஏற்றுக் கொள்வது முக்கியம் என்பதை விஜய் சேதுபதி அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+