தப்பிக்கவே முடியாது.. ஜட்ஜ் முன் வாக்கு மூலம் அளித்த பெண் ஆட்சியர்! எஸ்பியிடம் கணவர் சாட்சியம்! பரபர
சென்னை: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட நீதித்துறை நடுவரிடம் இன்று மாவட்ட ஆட்சியர் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதை அடுத்து நீதித்துறை நடுவரும் இந்த வழக்கில் ஒரு சாட்சியமாக மாறக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்து. தன் மீதான குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்து வந்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக, பிஎன்எஸ் பிரிவு 75ன் கீழ் பாலியல் துன்புறுத்தல், பிரிவு 78ன் கீழ் பின்தொடர்தல் மற்றும் பிரிவு 79ன் கீழ் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையை ஐஜி காமினி மேற்பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து அருள் விக்னேஷ் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இன்று தியாகதுருகம் சுற்றுலா மாளிகையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தனி விசாரணை அதிகாரியான சிருஷ்டி சிங், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், சற்றுமுன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் கணவரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான அப்துல் ரஹ்மான் தியாகதுருகம் சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தார். அவரிடம் தற்போது தனி விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்டார்.
முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட நீதித்துறை நடுவரிடம் இன்று மாவட்ட ஆட்சியர் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் பல்வேறு அழுத்தம் காரணமாக அருள் விக்னேஷ் சம்பவங்களை திருத்திப் பேசும் பட்சத்தில் நீதித்துறை நடுவரிடம் அளிக்கும் வாக்குமூலம் வழக்கின் முக்கிய சாட்சியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து தான் இந்த வழக்குக்கு வலு சேர்க்கும் வகையில் கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் சுவாதி அழகப்பனிடம் மாவட்ட ஆட்சியர் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இதை அடுத்து நீதித்துறை நடுவரும் இந்த வழக்கில் ஒரு சாட்சியமாக மாறக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
