"நாங்க பிச்சையா கேட்கிறோம்" என அகிலேஷ் யாதவை சாடிய காங்., எம்பிக்கு மேடையிலேயே டோஸ் விட்ட கார்கே!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 26 சட்டசபை தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். இதனால் கோபமான காங்கிரஸ் எம்பி, ''நாங்கள் ஒன்னும் பிச்சை கேட்கவில்லை'' என்று அகிலேஷ் யாதவை விளாசிய நிலையில் அவருக்கு தற்போது மல்லிகார்ஜுன கார்கே வார்னிங் கொடுத்துள்ளார். வாயை மூடிக்கொண்டு வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும் என்று மேடையிலேயே எச்சரிக்கை செய்த சம்பவம் நடந்துள்ளது.

we-mustshed-arrogance-congress-mallikarjun-kharge-warns-mp-imran-masood-after-he-slams-akhilesh-yad

உத்தர பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரசேதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கியது.

மாநிலத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 100க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட காங்கிரஸ் கட்சி விரும்பியது. ஆனால் அகிலேஷ் யாதவ் மொத்தம் 26 தொகுதிகளை மட்டுமே தற்போத வரை ஒதுக்கி உள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த காங்கிரஸ் கட்சியின் சஹாரன்பூர் தொகுதியின் எம்பி இம்ரான் மசூத், ''நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. உங்களிடம் (சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்) பிச்சை கேட்கவில்லை. அதற்குள் நீங்களாகவே 26 தொகுதிகளை அறிவித்துவிட்டீர்கள். பத்திரிகையாளர்கள் மூலமாகத்தான் எங்களுக்கு வேட்பாளர் பட்டியல் விவரம் தெரியவருகிறது. அப்படியிருக்கும் போது, இது குறித்து நாம் ஏன் விவாதிக்க வேண்டும்? நீங்களே மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிடலாமே?'' என்று சாடினார்.

இந்நிலையில் தான் காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத்தை, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக கடிந்துள்ளார். இன்று காங்கிரஸ் சார்பில் உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். மேடையில் காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் உள்பட பல்வேறு தலைவர்கள் இருந்தனர்.

இந்த தலைவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கூறி மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது இம்ரான் மசூத்தை பார்த்தபடி மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது ''இம்ரான் மசூத்.. இவரை அடிக்கடி இப்போது தொலைக்காட்சியில் பார்க்கிறேன். அவர் மிகுந்த உணர்ச்சியுடனும், ஆர்வத்துடனும் பேசுவதை நான் கவனிக்கிறேன்.

ஆனால் வெறும் வார்த்தைகளை தாண்டி செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சேர்ந்து பணியாற்றுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம்மால் முன்னேற முடியும். இம்ரான் மசூத் கட்சியின் கொள்கைக்காக தொடர்ந்து போராடி வருகிறார். நமது நிலைப்பாடுகளை நிலைநாட்டை அவர் போராடி வருகிறார்.

அவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய டார்க்கெட் என்பது பாஜகவின் யோகி ஆதித்யநாத் (உத்தர பிரதேச முதல்வர்), மோடியை (பிரதமர்) தோற்கடிப்பது தான். அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செல்பட வேண்டும். நாம் நம்முடைய அகங்காரத்தை கைவிட வேண்டும்.

ஏனென்றால் இந்த முறை நம்மால் எளிதில் வெற்றி பெற முடியும். ஆனால் உள்கட்சி பூசல்கள் தான் வெற்றியை கடினமாக்கிவிடும். இதனால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ' என்று கூறினார். இதன்மூலம் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவை பார்த்து நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை என்று சாடிய இம்ரான் மசூத் எம்பியை வாயை மூடி வார்த்தைகள் விடாமல் அமைதியாக இருக்கும்படி மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+