ஜியோ 'Happy New Year 2.0' ஆஃபர் பிளான்ஸ்.. அன்லிமிடெட் டேட்டாவுடன் சூப்பர் திட்டங்கள்.. முழு விவரம்!
மும்பை: வரவிருக்கும் புத்தாண்டையொட்டி சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். ரூ. 399க்கு மாதாந்திர ரீசார்ஜ் பிளானும் ரூ. 3999-க்கு வருடாந்திர பிளானும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே, கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஜியோ, இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஹேப்பி நியூ இயர் 2.0 பிளானை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ ரூ. 3,999 பிளான்
2027 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள "ஹேப்பி நியூ இயர் 2.0 பிளான்" ஏராளமான சலுகைகளுடன் கிடைக்கிறது. அதன்படி, ரூ.3,999 பிளானில், அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 4ஜி மற்றும் 5ஜி அன்லிமிட்டட் டேட்டா என 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
அதுமட்டுமின்றி மொபைலில் ஜியோ ஹாட்ஸ்டார் + ஹாலிவுட் ஆகியவற்றை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம். ஜியோடிவி வழியாக ஃபேன் கோட் உள்ளிட்ட பல டிஜிட்டல் சேவைகளைப் பெறலாம். இந்தத் திட்டத்தில் JioAICloud மூலம் 50GB இலவச கிளவுட் சேமிப்பகமும் அடங்கும். கேன்வா ப்ரோ: ரூ. 4,000 மதிப்புள்ள, பிரீமியம் வடிவமைப்பு கருவிகள் மற்றும் டெம்ப்ளேட்களுடன் கூடிய கேன்வா ப்ரோவின் 12 மாத சந்தாவும் இதனுடன் இலவசம்.
ரூ.399 பிளான்
மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தில், ரூ. 399-க்கு ரீசார்ஜ் செய்யவேண்டும். இதில் வரம்பற்ற அழைப்புகள், நாளொன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா வழங்கப்படும். இவை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அதுமட்டுமின்றி 28 நாள்களுக்கு மொபைலில் ஜியோ ஹாட்ஸ்டார் + ஹாலிவுட் ஆகியவற்றை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.
மேலும், ஜியோ ரூ.15 மற்றும் ரூ.25 விலையில் அன்லிமிட்டட் 5ஜி டேட்டா கூடுதல் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறுகிய காலத்திற்கு அன்லிமிட்டட் 5ஜி டேட்டா தேவைப்படும் பயனர்களுக்காக ஜியோ இரண்டு கூடுதல் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
5ஜி டேட்டா பேக்
ஜியோவின் ரூ.50 நைட் டேட்டா பேக், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு, தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டாவை வழங்குகிறது.
ஜியோவின் புத்தாண்டு ஸ்பெஷல் திட்டங்கள் நவம்பர் 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. வாடிக்கையாளர்கள் MyJio செயலி, Jio.com, ஜியோ கடைகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. நாடு முழுவதும் சுமார் 54 கோடி வாடிக்கையளர்கள் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு அடுத்த இடங்களில் தான் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும், அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
