நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தொடர்ந்த வழக்கு.. பாடகி கெனிஷா டிச 3ல் ஆஜராக உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா டிசம்பர் 3ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து கோரி ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனைத் தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்தன. இணையத்திலும் இருவரைக் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

Ravi Mohan Defamation Case

இதையடுத்து, ஆர்த்தி ரவி தொடர்ந்த வழக்கில், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராகப் பொதுவெளியில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறி ரவி மோகன் ஊடகங்களைச் சந்தித்ததாக ஆர்த்தி ரவி மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரவி மோகன் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி ரவி மோகன் பொது அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கிடையே, கெனிஷாவுக்கு எதிராகவும் ஆர்த்தி ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசத் தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி கெனிஷா வெளியிட்டுள்ள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும், தனக்கு நஷ்டஈடாக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மரியா கிளாட், சாட்சிகளைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கெனிஷா வரும் டிசம்பர் 3ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் ஆஜராகாவிட்டால், வழக்கு அன்றே விசாரித்து முடிக்கப்படும் என்றும் மாஸ்டர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான பொது அறிவிப்பை நாளிதழ்களில் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, நடிகர் ரவி மோகன் தனது குழந்தைகளைச் சந்திக்க குடும்ப நல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆர்த்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், குடும்ப நல நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி ரவி மோகன் இடைக்காலப் பராமரிப்புத் தொகையை வழங்கவில்லை என்றும், குழந்தைகளைப் பராமரிப்பதில் அவருக்கு உண்மையான அக்கறை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தோழியுடன் அண்மையில் ரவி மோகன் போதைப் பொருள் உட்கொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால், குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் ஆர்த்தி ரவி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+