ராமநாதபுரம் வயல்வெளியில் வெள்ளை நிற மயில்! பச்சை பசேல் கிராமத்தில் அழகிய காட்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வயல்வெளியில் வலம் வந்த வெள்ளை மயிலை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இவை அரிய வகை மயில்கள் என்கிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புறப் பகுதிகளில் மயில்கள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக, வயல்வெளிகள், கன்மாய்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இரைத் தேடி வருவது வழக்கம்.

இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே வடகாடு பகுதி, கீழக்கரை அடுத்த சின்னமாயாகுளம் உள்ளிட்ட சில பகுதிகளில் அவ்வப்போது வெள்ளை மயில்கள் தென்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் அருகே உள்ள முதுநாள் கிராமத்தில் வெள்ளை மயில் ஒன்று வயல்வெளியில் இரைத் தேடி சுற்றித் திரிந்துள்ளது. பச்சைப்பசேல் எனக் காட்சியளிக்கும் வயல்வெளிக்கு மத்தியில், தனித்துவமான வெண்மை நிறத்தில் கம்பீரமாக நடமாடிய அந்த மயிலின் காட்சியை அவ்வழியாகச் சென்ற விவசாயிகள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
விவசாயி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில பரவச் செய்தார்.
பொதுவாக நீல நிறத்தில் காணப்படும் மயில்களுக்கு மத்தியில், முற்றிலும் வெள்ளை நிறத்தில் காணப்பட்ட இந்த மயில் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயற்கையின் அழகை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தக் காட்சியைப் பதிவு செய்தது கண்டு பல்வேறு ஆர்வலர்கள் ஆச்சரியமுடன் கண்டு ரசித்தனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், வெள்ளை மயிலின் அழகான தோற்றத்தைக் கண்டு பலரும் வியப்புடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். வெள்ளை மயிலுக்கு அல்பினோ என்கிறார்கள். இதற்கு கண்கள் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்குமாம். ஆனால் மரபணு குறைபாடு உள்ள மயில்களுக்கு கண்கள் நீலம் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்குமாம்.
வயல்வெளியில் சுதந்திரமாக வலம் வந்த வெள்ளை மயிலின் காட்சி இயற்கை ஆர்வலர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை அரிய வகை என்கிறார்கள். சிலர் மரபணு பிரச்சினையால் அந்த மயிலின் தோகை நீல நிறத்திற்கு பதிலாக வெண்மை நிறத்தில் வந்துவிட்டது என்கிறார்கள். இதில் எது உண்மை என தெரியவில்லை.
அதாவது வெள்ளை மயில் என்பது நீல நிற மயிலின் மரபணு மாறுபாடு என்கிறார்கள். லூசிசம் எனப்படும் மரபணு மாற்றத்தால் உருவாகின்றன. இந்த மாற்றத்தினால் மயிலின் இறகுகளில் நிறமிகள் உருவாவது தடுக்கப்பட்டு உடல் முழுவதும் தூய வெண்ணை நிறத்தில் காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications
