சேலம் வீரபாண்டியில் பொறியில் சிக்கிய விஏஓ.. தனிப்பட்டா கேட்போர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே தொழிலாளியிடம் தனிப்பட்டா வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்த உதவியாளரும் சிக்கினார். தனி பட்டா வழங்க லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமேஇல்லை என்றாலும் சிலர் லஞ்சம் கேட்பது ஏன்.. என்ன சிக்கல் உள்ளது என்பதை பார்ப்போம்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே பாலம்பட்டியில் 30 வயதாகும் தமிழ்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பி ரிஷி. இவர்கள் இருவரும் கடந்த 18-ந்தேதி தனது தந்தைக்கு சொந்தமான 2,180 சதுர அடி வீட்டுமனையை சரி பாதியாக பிரித்து, தங்களது பெயரில் தனித்தனியாக கிரையம் செய்து கொண்டுள்ளார்கள். இதையடுத்து அவர்கள் இருவரும் தனி பட்டா கேட்டு அக்ரபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்கள். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் (50) என்பவரை தமிழ்செல்வன் சந்தித்த போது, அவர் தனி பட்டா வழங்க ரூ.14 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

Salem VAO

இதை கொடுக்க மறுத்த அவரிடம் ரூ.8 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா வழங்கப்படும் என கூறியிருந்தாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத தமிழ்செல்வன் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.8 ஆயிரத்தை, அக்ரபாளையம் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரான ராஜசேகரன் (59) என்பவரிடம் தமிழ்செல்வன் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரையும், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த செய்தியில் ஒரு முக்கியமான விஷயம் பட்டா வாங்க விரும்புவோர் அறிய வேண்டியதிருக்கிறது. தனி பட்டா வழங்குவதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர, கூடுதல் கட்டணத்தை கொடுக்கக்கூடாது.தனிப்பட்டா பெறுவதற்கு நீங்கள் யாருமே லஞ்சம் கொடுக்க வேண்டிய ஒரு அவசியமும் இல்லை.

தனிப்பட்டா வாங்கும் போது பொதுவாக வருவாய்த் துறையில் சில நடைமுறைகள் இருக்கிறது. முதலில் ஒரு நிலத்தை இரண்டாக பத்திரப்பதிவு செய்கிறீர்கள் என்றால், இருவரின் கிரையப் பத்திரங்களையும் நிலத்தின் பழைய பட்டா மற்றும் வருவாய்ப் பதிவுகளையும் வருவாய் துறை அதிகாரிகள் சரி பார்க்க வேண்டியது அவசியம். அடுத்ததாக பிரிக்கப்பட்ட மனைகளின் எல்லைகள், அளவுகள் மற்றும் உட்பிரிவு போன்ற விவரங்களை சரிபார்க்க வேண்டும். அதேபோல் ஒரே சர்வே எண்ணில் உள்ள நிலங்கள் சில பகுதிகளில் பிரிக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்ப வருவாய்ப் பதிவுகளில் மாற்ற வேண்டும். எல்லாம் சரியாக இருந்தால் தனித்தனி பட்டா வழங்குவார்கள்.

கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், வருவாய் ஆய்வாளர் வரை வரிசையாக அதிகாரிகள் கவனத்திற்கு சென்று தான் பட்டா வரும். இதில் யார் லஞ்சம் கேட்டாலும் புகார் அளிக்கலாம்.ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களும் இருக்கிறது. ஏதாவது சொத்தை காரணத்தை கூறி இழுத்தடிப்பது, பின்னர் பணம் கொடுத்தால் லஞ்சம் தருவதும் நடக்கிறது. அப்படி நடப்பதை கண்டு அமைதியாக செல்லாமல் புகார் அளித்தால் அவர்கள் மாட்டுவார்கள். அடுத்து அங்கு வரும் அதிகாரி உங்களிடம் லஞ்சம் வாங்காமல் பைலை நகர்த்துவார். ஒருவேளை உங்கள் பைலில் சட்ட சிக்கல் இருந்து, அதற்காக லஞ்சம் கேட்டிருந்தால், அதுவும் தவறு தான். அந்த சட்டசிக்கலை தீர்க்காமல் பட்டா வாங்க லஞ்சம் கொடுக்க விரும்புவதும் தவறு தான். இரண்டுமே இங்கு நடக்கிறது என்பதே எதார்த்தம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+