திருவண்ணாமலையில் கழிவறையில் காவலர் இருந்த கோலம்.. தீப விழாவிற்கு வந்தவருக்கு என்ன நடந்தது?
திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீப திருவிழா பணிக்காக திருண்ணாமலை வந்த காவலர் அரசினர் மேல்நிலைப்பள்ளி கழிவறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலை நகரத்தில் உள்ள மங்கலம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் திருவிழா நடைபெற்று வந்தது. இந் நிலையில் மகா ரத தேரோட்டம் மற்றும் மகா தீப திருவிழா பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 15,500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை தீபதிருவிழா பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த காவலர்கள் மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்கி இருந்தனர். இந்நிலையில் தீபத் திருவிழா முடிந்த நிலையில் முதல் தங்களது சொந்த மாவட்டத்திற்கு காவலர்கள் சென்றனர். அதில் ஒரு காவலர் மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆண்கள் கழிவறையில் இறந்த நிலையில் இருந்துள்ளார். இன்று காலையில் பள்ளி வழக்கம் போல் நடைபெற்ற நிலையில் கழிவறைக்கு சென்ற பணியாளர்கள் பூட்டியிருந்த கழிவறை திறக்க முடியாமல் இருந்ததை கண்டனர். அதனை உடைத்து திறந்து பார்த்த போது அங்கு காவலர் ஒருவர் இறந்த நிலையில் இருந்து அதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு தலைமை ஆசிரியர் மங்கலம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த மங்கலம் காவல் துறையினர் இறந்த உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் முதற்கட்ட விசாரணையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வடிவழகன் (வயது38). இவர் சென்னை ஆவடி சிறப்பு காவலர் 13ம் அணியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் பணிக்காக வந்த காவலர் கழிவறையில் இறந்து கிடந்த சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Click it and Unblock the Notifications
