அய்யய்யோ கலாய்ப்பாரே.. மாணவர்கள் விழாவில் முதல்வர் விஜய் பேச்சு.. ப்ளூ சட்டை மாறன் கொடுத்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் பொதுவாக மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுவது இல்லை. ஆனால் இந்த முறை 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் போது பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு பதிலடி கொடுப்பது போல ப்ளூ சட்டை மாறன் பதிவு வெளியிட்டிருக்கிறார்.

விருது விழாவில் பேச்சு

மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசும்போது, "நான் இப்போது இந்த விஷயத்தை இங்கே பேசி ஆக வேண்டும், புத்தகங்கள் குறித்து இந்த இடத்தில் பேசினால்தான் சிறப்பாக இருக்கும். மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க அடிப்படையான புத்தகத்திலேயே ஊழல் அதுவும் தொழில்நுட்பத்தை வைத்து செய்துள்ளனர். இதையெல்லாம் எப்படி மன்னிக்க முடியும்? அத்தனை பேரையும் சட்டத்தின் முன்னிறுத்த அத்தனை வேலைகளும் நடைபெற்று வருகிறது. நூலகங்கள் என்கிற பெயரில் மிகப்பெரிய ஏஐ ஸ்கேம் செய்து இருக்கிறார்கள் திமுக என்று கூறினார்.

Blue Sattai Maran

முதல்வர் விஜய் கலாய்

மேலும் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசும்போது, "ஐயையோ வந்துட்டாரே.. கலாய் பாரே" என விஜய் ஆக்சன் எல்லாம் செய்து பேசியதை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் வைரல் செய்து வருகின்றனர். அவர் பேச பேச ஒட்டுமொத்த அரங்கமும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது. சமீப காலமாக உதயநிதி ஸ்டாலின் எந்த ஒரு ட்விட் போட்டாலும் அதற்கு கீழே, விஜய் ரசிகர்களும், விர்ச்சுவல் வாரியர்ஸ் விஜய் டிவி ராமர் பேசிய "அய்யய்யோ வந்துட்டாரு கலாய்ப்பாரே" என்ற டெம்ப்ளேட்டை கொடுத்து வருகிறார்கள்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு

இதையெல்லாம் கவனித்த முதல்வர் விஜய் இன்று அதே டயலாக்கை வைத்து உதயநிதி பெயரை சொல்லாமலேயே கலாய்த்து இருக்கிறார். இந்த வீடியோக்கள் வைரல் ஆகி வந்ததும், ப்ளூ சட்டை மாறன் இதை தனது எக்ஸ் தளத்தில் பரவி பகிர்ந்து, "Very cringe bro. பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஏன்? 116 நாட்கள் ஆக்சன் எடுக்காதது யார்? 'இப்படியான‌' பேச்சுக்கு விசிலடிக்கும் கூட்டம் மட்டுமே தமிழ்நாடல்ல. விரைவில் உணர்வீர்கள்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

Blue Sattai Maran

அதாவது மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில், அரசியல் விமர்சனம் செய்வது சரியா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கும் அவர், 116 நாட்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று சொல்லி இருக்கிறார். அது கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது கொடுக்கப்பட்ட புகாரை தான் அவர் மறைமுகமாக சொல்கிறார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்போது இந்த விவாகரத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் சோசியல் இந்தியாவில் வெளியாகி வருகிறது.

ரசிகர்கள் கருத்து

விஜய் ரசிகர்கள், "மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும் ஊழல் குறித்து பேசுவதில் என்ன தவறு என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கேள்வி கேட்க வேண்டியதுதானே" என்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அதிலும் உதயநிதியை மேடையில் வைத்து விஜய் கலாய்த்த அந்த தருணத்தையும் பலரும் ரசித்து வீடியோவாக பகிர்ந்து வருகிறார்கள்.

மறுபக்கத்தில் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி என்பது, அவர்களின் திறமையை பாராட்டி ஊக்கப்படுத்துவதற்கான மேடை. அங்கு அரசியல் விமர்சனங்களை முன்வைப்பது தேவையா? என்றும், குறிப்பாக ஒரு அரசியல் தலைவரை கலாய்க்கும் வகையில் பேசுவது அந்த நிகழ்ச்சியின் நோக்கத்தில் திசை திருப்புகிறதா? என்றும் விமர்சனங்கள் எழுகின்றன. ப்ளூ சட்டை மாறனின் கேள்வியும் இதே கருத்தை முன் வைப்பதாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+