ரூ.5 அம்மா உணவகம் ஸ்டைல் கேன்டீன்! பட்டதாரிகளுக்கு ரூ.5000 உதவித்தொகை! அகிலேஷ் யாதவ் தேர்தல் அறிக்கை
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும் என்றும், படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு 2027ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் சமாஜ்வாதி கட்சி முதல் கட்சியாக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை
அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.5000 உதவி தொகை
மேலும், படிப்பை முடித்தும் வேலை கிடைக்காமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதன் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். தேர்வுகளின் வினாத்தாள் லீக் போன்ற சம்பவங்கள் நடந்தால், அதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சமாஜ்வாதி
வேலைவாய்ப்பு மட்டுமின்றி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயனளிக்கும் வகையிலான சில வாக்குறுதிகளையும் சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, 'சமாஜ்வாதி கேன்டீன்' என்ற பெயரில் உணவகங்கள் தொடங்கப்பட்டு, அங்கு ரூ.5க்கு உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், மாநிலத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் வாக்குறுதிகள்
- உத்தர பிரதேசத்தில் சாதி கணக்கெடுப்பை நடத்தி, அதற்கேற்ப இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம்.
- PDA எனப்படும் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு ₹50 கோடி வரையிலான அரசு ஒப்பந்தங்களில் 50% ஒதுக்கீடு செய்யப்படும்.
- ஐந்து ஆண்டுகளுக்குள் 25 லட்சம் அரசு வேலைகளையும், 2 முதல் 3 கோடி தனியார் வேலைகள் உருவாக்கப்படும்.
- வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ₹5,000 உதவித்தொகை வழங்கப்படும்.
- 3 முதல் 6 மாதங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறும். மேலும், வினாத்தாள் லீக் ஏற்பட்டால் அமைச்சர்கள்/அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக்க வேண்டும். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
- அக்னிவீரர்கள் உத்தர பிரதேச காவல்துறை மற்றும் மாநில அரசு துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
- விவசாயக் கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்யப்படும். 23 பயிர்களுக்கும் மற்றும் பாலுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை ) சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும்.
- ₹15,000 கோடி நிதியைப் பயன்படுத்தி, கரும்புக்கான கொள்முதல் தொகையை 24 மணி நேரத்திற்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
- விவசாய நீர்ப்பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். கிராமப்புற குடும்பங்களுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
- மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்படும். 26,000 தொடக்க பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மீண்டும் வழங்கப்படும்.
- சிக்ஷா மித்ராக்களை முறைப்படுத்தி, மாதம் ₹5,000 வழங்கப்படும்
- வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ₹10 லட்சத்திற்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும். சிறுபான்மையினர், தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும்.
- லக்னோ புற்றுநோய் மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்கப்படும். அனைத்து 18 கோட்டங்களிலும் உயர் சிறப்பு மருத்துவமனைகளை அமைக்கப்படும்.
- 2005க்கு முந்தைய பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். அவுட் சோர்ஸிங் முறை நிறுத்தப்படும்.
- அத்தியாவசிய பொருட்களின் விலைகள், தனியார் பள்ளிக் கட்டணங்கள் மற்றும் மருத்துவமனை கட்டணங்களுக்கு வரம்பு நிர்ணயம் செய்யப்படும்.
- சமாஜ்வாதி உணவகங்களில் ₹5-க்கு உணவு வழங்கப்படும். வயதான பெண் கைவினைஞர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ₹40,000 ஆண்டு ஓய்வூதியம் வழங்கப்படும்..
- காவல்துறை காலிப்பணியிடங்களில் 33% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். நில மாஃபியாக்களுக்கு எதிராக சிறப்பு படை உருவாக்கப்படும்.
- மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய நகரங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப (மையங்களாக மேம்படுத்தப்படும்..
- குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் மீது எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டப்படக்கூடாது.
- ஏஐ மூலம் போக்குவரத்து மேம்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications
