ஆபரேஷன் செய்ய பணம் இல்லாமல் தவித்தேன்.. ஜிவி பிரகாஷ் செய்த உதவியை மறக்க முடியுமா? நெகிழ்ந்த நடிகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர்கள் திரையில் நம்மை சிரிக்க வைத்தாலும், அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார்கள் என்பது பல நேரங்களில் நமக்கு தெரியாது. அப்படி தனது வாழ்க்கையில் நடந்த கஷ்டமான விஷயத்தை பற்றி நடிகர் சதீஷ் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதிலும் தனது மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டபோது யாரிடம் கேட்கும் உதவி கிடைக்காத நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் செய்த உதவியை நினைத்து நெகிழ்ந்திருக்கிறார்.

தனக்கான போராட்டம்

நடிகர் சதீஷை பொறுத்த வரைக்கும் ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்தவர், அந்த மேடை அனுபவத்துக்கு பிறகு சினிமாவில் நுழைந்து படிப்படியாக நகைச்சுவை நடிகராக ரசிகர்களிடம் அறிமுகமானார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த படங்கள் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்து. குறிப்பாக எதிர்நீச்சல், ரெமோ போன்ற படங்களில் அவருடைய காமெடி ரசிகர்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும்.

Actor Sathish

அதற்கு பிறகு பல முன்னணி நடிகர்களில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் முயற்சி செய்கிறார். நாய் சேகர், ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் அவருடைய முயற்சியும் பார்க்க முடிந்தது. இருந்தாலும் தனக்கென ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சதீஷ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சதீஷ் சொன்ன விஷயம்

இப்படி சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏற்பட்ட பண பிரச்சனையை பற்றி தான் இப்போது அவர் எமோஷனலாக பேசியிருக்கிறார். அதாவது, "நான் பணரீதியாக ரொம்ப கஷ்டப்பட்டு இருந்த ஒரு நேரம். அப்போ எனக்கு ஒரு முக்கியமான ஆப்ரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் என்னிடம் பணம் இல்லை.

என்ன பண்றதுன்னு தெரியல. சில பேர் கிட்ட பணம் கேட்டேன் ஆனால் பணம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் எனக்கு உதவி தேவை என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட ஜிவி பிரகாஷ் நேரடியாக வந்து பெரிய தொகையை கொடுத்தார். அதோடு, மச்சான் நீ இதை திருப்பித் தர வேண்டாம் என்று சொன்னார். உண்மையை சொல்லனும்னா அந்த நேரத்தில் எனக்கு அந்த பணத்தை திருப்பி கொடுக்கிற நிலையில் நானும் இல்லை. ஆனால் மச்சானுக்கு எவ்வளவு பெரிய மனசு" என்று பெருமையாக சொல்லி இருக்கிறார்.

ஜிவி பிரகாஷின் பெருந்தன்மை

இந்த வார்த்தைகள் தான் இப்போது ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது. ஏனென்றால் ஒருவருக்கு பணம் தேவைப்படும் நேரத்தில் உதவி செய்வது என்பது வேறு, அதை திருப்பி தர வேண்டாம் என்று சொல்லி அவருடைய மன கஷ்டத்தையும் குறைப்பது என்பது வேறு. அதுவும் மருத்துவ செலவுக்காக பணமில்லாமல் தவித்த நேரத்தில் யாரிடமும் கிடைக்காத உதவி தன்னுடைய நண்பன் ஜிவி பிரகாஷிடம் இருந்து கிடைத்திருக்கிறது.

சினிமாவில் யார் பெரிய நடிகர்? யார் பெரிய இசையமைப்பாளர்? என்றெல்லாம் பேசுவதை தாண்டி ஒருவருக்கு உண்மையிலேயே தேவைப்படும் நேரத்தில் உதவுவதுதான் முக்கியம். அந்த உதவியை பெற்றவர், எத்தனை வருஷங்கள் கழித்தும் மறக்காமல் நினைவு கூர்ந்து நெகிழ்ச்சியுடன் பேசுவது இன்னும் அழகான விஷயம். சதீஷின் இந்த பேட்டியை பார்த்து ரசிகர்கள் ஜிவி பிரகாஷின் மனிதநேயத்தை பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+