"காதில் கேட்க கூட முடியல.." பெண் பயணிகளிடம் அத்துமீறிய போதை இளைஞர்! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூரில் குடிபோதையில் மினி பேருந்தில் ஏறிய இளைஞர், பெண் பயணிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியதுடன், ஆண் பயணிகளிடமும் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தை இயக்கவிடாமல் ஓட்டுநர், நடத்துநரிடமும் வாக்குவாதம் செய்த அவரை, ஆத்திரமடைந்த பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மதுபோதையில் பொது இடங்களில் மக்களை தொந்தரவு செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைக்கு சென்று மதுவை வாங்கி குடித்துவிட்டு, மக்களை தொந்தரவு செய்வதே இவர்கள் வேலையாக வைத்துள்ளனர். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Drunk Passenger

அரியலூர் அருகே உள்ள மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் கவியரசு. இவர் அரியலூரில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அரியலூரில் இருந்து கொத்தவாசல் செல்லும் மினி பேருந்தில் கவியரசு பயணம் செய்துள்ளார். அப்போது அவர் மதுபோதையில் தட்டுத்தடுமாறி தான் பேருந்திலேயே ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே அவர் ரகளையில் ஈடுபட தொடங்கியுள்ளார். அங்கு பயணம் செய்த பெண் பயணிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அவரை கண்டித்துள்ளனர். ஆனால், அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆண் பயணிகளையும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி பேருந்தில் பாடல்களை போடுமாறு சொல்லி ஓட்டுநரிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஓட்டுநர் மற்றும் நடத்துநருடனும் தகராறு ஏற்பட்டுள்ளது. கவியரசின் தொடர் ரகளையால் பஸ்ஸை தொடர்ந்து இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுநர் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி நுழைவாயில் அருகே மினி பேருந்தை நிறுத்தினார். பின்னர் போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே அங்கு திரண்ட பொதுமக்கள், பேருந்தில் ரகளை செய்த கவியரசை பிடித்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவரை இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்துக்கே அழைத்து சென்ற பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அரியலூர் போலீசார் கவியரசு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+