2வது மகனை பற்றி உருக்கமாக போஸ்ட் வெளியிட்ட ஆர்த்தி ரவி.. ரவி மோகன் நிலை? குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: ரவி மோகன்- அவருடைய மனைவி ஆர்த்தி வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்திருக்கும். விவாகரத்து செய்தியால் அடிக்கடி செய்திகளிலும் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆர்த்தி ரவி தன்னுடைய 2வது மகன் குறித்து ஒரு உருக்கமான பதிவு வெளியிட்டிருக்கிறார்.
ஆர்த்தி ரவி பதிவு
ரவி மகனின் இரண்டாவது மகன் அயானின் பிறந்த நாளுக்காக ஆர்த்தி இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், இன்று உனக்கு என்னால் ஒரு பரிசு கொடுக்க முடியும் என்றால் என் கண்களால் உன்னை நீயே பார்க்கும் திறனைதான் கொடுப்பேன். அப்படி பார்த்தால் நான் சிரிக்கவே மறந்து விட்டேன் என்று நினைத்த நேரத்திலும் என்னை சிரிக்க வைத்து அந்த குட்டி பையனை நீ பார்ப்பாய். உன் சகோதரனுக்கு நீ ஒரு பாறை போல துணையாக நிற்பதையும், எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியாக அவன் அருகில் இருப்பதையும் பார்ப்பாய்.
மற்றவர்கள் பயன்படுத்திய உடைகளை கூட டிசைனர் ஆடைகள் போல அணிந்து கொண்டு அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத உன்னை பார்ப்பாய். இந்த நாளில் எனக்கு இருக்கும் ஒரே ஆசை என்ன தெரியுமா? உன் குழந்தை பருவத்தை நினைக்கும் போது வாழ்க்கையில் இருந்த கஷ்டங்களையோ.. உனக்கு கிடைக்காமல் போன விஷயங்களையும் நினைவில் வைத்துக் கொள்ளாதே...
தூக்கம் இல்லாத இரவுகள்
அதற்கு பதிலாக உனக்கு கிடைத்த எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள். சிரிப்பு, தூக்கமில்லாமல் கழித்த இரவுகள், சின்ன சின்ன பயணங்கள், அர்த்தமே இல்லாமல் செய்த அந்த முட்டாள்தனமான சந்தோஷமான விஷயங்கள், எப்போதும் உனக்காக இருந்த ஒரு வீடு, இந்த இரண்டு மகன்களுக்காக மலைகளையே நகர்த்த தயாராக இருந்த ஒரு அம்மா.. தாமதமாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அயானு. என் இரண்டாவது இதயம்.. ஆனால் அன்பின் ஒருபோதும் இரண்டாவது இல்லை. எப்போதும் என் அதிசயம் நீ தான் என ஆர்த்தி மிகவும் எமோஷனலாக அந்த பதிவை முடித்திருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து
இந்த பதிவை படித்தவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது, ஒரு அம்மாவாக ஆர்த்தி தன்னுடைய குழந்தைகளை எவ்வளவு கவனிக்கிறார் என்பதுதான். குறிப்பாக என்னுடைய இரண்டாவது இதயம் ஆனால் அன்பில் ஒருபோதும் இரண்டாவது இல்லை என்ற வார்த்தைகள் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது. அதே நேரத்தில் மற்றவர்கள் போட்ட உடையை நீ சந்தோஷமாக போட்டுக் கொள்கிறாய் என்று ஆர்த்தி வெளியிட்டு இருப்பதை பார்க்கும்போது ரவிமோகன் தன்னுடைய குழந்தைகளின் உடைக்காக கூட செலவு செய்ய மாட்டாரா? என்று கூட சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
விஜய் மகனை இழுத்து பேசிய ரவி மோகனின் மாமியார்.. 15 நாள் முன்பு நடந்தது தெரியுமா? சுஜாதா ஆதங்கம்
ரவி மோகன் ஆரத்தி இடையிலான திருமண வாழ்க்கை பிரச்சினை தற்போது நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கிலா பலகட்ட விசாரணை நடந்துள்ளது. இடைக்கால ஜீவனாம்சம் தொடர்பான வழக்கிலும், சென்னை குடும்ப நல நீதி மன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவு
அதாவது ஆர்த்தி மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் வழங்க ரவி மோகனுக்கு உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியான. அதே நேரத்தில் தன்னுடைய மகன்களை ரவி மோகன் சந்திப்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் உத்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரவி மோகனின் மாமியாரும் ரவி ஆர்த்தியின் அம்மாவான சுஜாதா விஜயகுமார் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது என்னுடைய மகள் ரவி மோகனுடன் சேர்ந்து வாழ்வதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறார். அவளுக்கு பணத்தை விடவும் கணவனின் அன்பு தான் தேவை.
ரவி மோகனுக்கு கோர்ட்டில் ஆறுதல்.. ஆனால் மாமியார் போட்ட குண்டு.. அந்த மெசேஜ்? சுஜாதா விஜயகுமார் கேள்வி
ஆனால் ரவி மோகன் தான் என்னுடைய மகள் மற்றும் பேர பசங்களை சந்திக்காமல் தவிர்த்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக ஒரு இடத்தில் சந்திக்க நாங்கள் ரெடியாக இருக்கிறோம். ஆனால் அவருடன் ஹீலிங் பண்ணும் ஒருவரை சேர்த்து வைத்துக்கொண்டு இருப்பதால் அவர் முன்பு குழந்தைகள் சந்திக்க முடியாது என்று சொல்கிறார்கள். இதனால் தான் ரவிமோகனை அவருடைய குழந்தைகள் சந்திக்கவே இல்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் இப்போது ஆர்த்தி ரவி வெளியிட்ட பதிவு இணையத்தில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications
