ஒரே வருஷத்துல உங்க வாழ்க்கை ஓஹோன்னு மாறிடும்! துபாய், அபுதாபியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) பணிபுரிய Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter ஆகிய பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் (Substation/Power Plant/ Industries) விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனவும், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிய்வித்துள்ளது.

OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாக செயல்படுகிறது.

UAE Job Vacancy 2026

போலி முகவர்களை நம்பி வேலை தேடிசென்று யாரும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல உதவுகிறது.

வெளிநாடுகளில் உள்ள சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமே செய்து தருகிறது. அந்த வகையில் ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) பணிபுரிய பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் 22 முதல் 40 வயதிற்குட்பட்ட குறைந்தது 6 மாத பணி அனுபவம் கொண்ட Electrical Assistant பணிக்கு மாத ஊதியமாக ரூ.32,000 முதல் ரூ.36,000 வரையும், 3 வருட பணி அனுபவம் கொண்ட Electrician பணிக்கு ரூ. 36,000 முதல் ரூ. 52,000 வரையும், Electrical Fitter பணிக்கு ரூ.40.000 முதல் ரூ.52,000 வரையும், கூடுதல் நேரம் பணிபுரியும் நபர்களுக்கு அதற்கான கூடுதல் நேரப் பணிக்கான ஊதியமும் (Overtime Allowance) வழங்கப்படும்.

விசா மற்றும் இருப்பிடம் ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport (Copy & Photo) ஆகியவற்றை 5.12.2026-ஆம் தேதிக்குள் அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ்ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம்." எனக் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+