ரிலையன்ஸ் ஜியோ பங்கு.. குவிந்த ரூ.2.50 லட்சம் கோடி. போட்டி போட்டு வாங்கிய நிறுவனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு மூலம் சுமார் ரூ.30 ஆயிரத்து 213 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. திரட்டப்படும் நிதி நிறுவனத்தின் கடன் அடைப்பு மற்றும் பொதுவான கார்ப்பரேட் தேவைகளுக்காகப் பயன்படுத்த போகிறது. இந்த பங்கு வெளியீடு இன்று தொடங்கி வரும் 23-ந்தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த சூழலில் முதன்மைய முதலீட்டாளர்களிடம் இருந்து ஜியோ நிறுவனத்தின் பங்கு வெளியீடு முதலீட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி குவிந்திருககிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தொலைத் தொடர்பு நிறுவனமாக தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் ஜிபோ பைபர், ஜியோ ஏர் பைபர் ஆகிய அதிவேக இணையசேவைகளையும் வழங்கி வருகிறது. மேலும் வெப் தொடர்கள், விளையாட்டுகளை பார்க்கும் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளம், சில்லறை விற்பனை கடைகளான ஜியோ மார்ட் உள்ளிட்ட சேவைகளையும் அளித்து வருகிறது.

Jio Reliance

இந்த சூழலில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இன்று தொடங்கி உள்ளது. முன்னதாக நேற்று முதன்மை முதலீட்டாளர்களுக்கான பொதுப்பங்கு முதலீடு ஏலம் தொடங்கியது. இதில், ஜியோ பங்குகளை வாங்க உலகளாவிய நிறுவனங்கள் ஆக்ரோஷமாக போட்டி போட்டு வாங்கின. வெறும் ரூ.8 ஆயிரத்து 109 கோடி மதிப்புள்ள பங்கிகளுக்கு, சாதனை அளவாக ரூ.2½ லட்சம் கோடி மதிப்புக்கு ஏலம் குவிந்திருக்கிறது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 30 மடங்கு அதிகம் ஆகும். பங்குச் சந்தை ஆவணங்களின்படி, ஒரு பங்கின் விலை ரூ.1,119 என நிர்ணயிக்கப்பட்டு, 212 முதன்மை முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 7.24 கோடி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஜியோவின் பங்குகளை பொறுத்தவரை அதிகபட்சமாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) ரூ.499.98 கோடி மதிப்பிற்கு பெற்றுள்ளது. நியூ வேர்ல்ட் பண்ட், சிங்கப்பூர் அரசு, ஸ்டேட் வங்கி போகஸ்ட் பண்ட் மற்றும் பி.என்.பி. பரிபாஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் ஜியோவின் பங்குகளில் முதலீடு செய்துள்ளன.
உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு 34.34 சதவீத பங்குகளும், காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதியங்களுக்கு 13.44 சதவீத பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிளாக்ராக், கேபிடல் குரூப், பிடிலிட்டி மற்றும் ஜேபி மோர்கன் போன்ற உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களும் பங்குகளை போட்டிப்போட்டு வாங்கி இருக்கின்றன.

இன்று வெளியிடும் பொதுபங்கு மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுமார் ரூ.30 ஆயிரத்து 213 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
வருகிற 28-ந்தேதி அன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு களமிறங்குகிறது. கிரே மார்க்கெட்டில் இப்போதே ஒரு பங்குக்கு ரூ.250 வரை பிரீமியம் அதிகரித்துள்ளதால், முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு 22 சதவீதம்வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்து இருக்கிறார்கள்.

ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் மிகப்பெரிய ஐபிஓ என்பதால், இதில் முதலீட்டாளர்கள் பங்கேற்க ஆர்வமாக உள்ளார்கள். ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், ஒரு பங்குக்கான விலை வரம்பை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை என நிர்ணயித்துள்ளது; மேலும், ஒரு லாட் அளவை 12 பங்குகள் என முடிவு செய்திருக்கிறது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் EBITDA லாப வரம்பு, 2024 நிதியாண்டில் 50.16%-லிருந்து 2026 நிதியாண்டில் 51.91%-ஆகவும், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 53.26%-ஆகவும் அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+