உதயநிதியை கலாய்த்த முதல்வர் விஜய்.. கொந்தளித்த போஸ் வெங்கட்! அவர் போட்ட போஸ்டுக்கு வரும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் உதயநிதி ஸ்டாலினை கிண்டல் செய்து பேசியது சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் மேடையில் பேசிய அந்த "ஐயையோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே... "டயலாக் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமாக இருந்தாலும், திமுக தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இப்போது நடிகரும் திமுகவை சேர்ந்தவருமான போஸ் வெங்கட் விஜய்யின் பேச்சை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார்.

போஸ் வெங்கட் பதிவு

போஸ் வெங்கட் தனது பதிவில், "தன்னை பிடித்த ரசிகர்களுக்காக மற்றவர்களை ஏராளப்படுத்தி, கேவலப்படுத்தி, கிண்டல் செய்து சினிமா வசனம் பேசும் தமிழ்நாடு முதல்வரே... இந்த பேச்சு விலைவாசியை குறைக்காது, பாலியல் கொடுமையை தடுக்காது, காணாமல் போன சிறுமியை திருப்பிக் தராது. உங்கள் ஆட்சியில் அதிகரித்திருக்கும் ரவுடிசம், கத்தி கலாச்சாரத்தை தடுக்காது" என காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

Vijay

மேலும், ஜாதகமே தெரியுமாமே... முடிந்தால் மேடையில் உண்மைகளை உண்மையை பேசுங்கள். முடிந்தால் தவறு செய்த உங்கள் எம்எல்ஏவிற்கு தண்டனை வழங்குங்கள், முடிந்தால் வாக்களித்த மக்களுக்கு நல்லாட்சியை தர முயலுங்கள். அதை விட்டுட்டு மேடை கிடைத்தவுடன் திமுகவை திட்டுவது, சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது, அர்த்தமில்லா இந்த பேச்சு எதற்க்கும் உதவாத வெரும் பேச்சு... மக்கள் எதிர்பார்த்த நல்ல மாற்றம்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது, விஜய் ஒரு அரசியல் தலைவரை கிண்டல் செய்து பேசுவதற்கு பதிலாக விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ரவுடிசம், கத்தி கலாச்சாரம் போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் போஸ் வெங்கட்டின் விமர்சனமாக இருக்கிறது. அதோடு தவறு செய்த சொந்த கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்று ஆட்சியாளர்களுக்கு சவால் விடும் வகையிலும் போஸ் வெங்கட் பேசியிருக்கிறார்.

விஜய் ரசிகர்கள் சப்போர்ட்

ஆனால் போஸ் வெங்கட் இந்த பதிவை போட்டதும் அவருடைய கமெண்ட் பகுதி இன்னொரு அரசியல் களமாகவே மாறி இருக்கிறது. விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள், விஜய் பேசிய புத்தக ஊழல் குறித்த குற்றசாட்டுகளை விட்டுவிட்டு உதயநிதியை கலாய்ப்பதை மட்டும் திமுகவினர் ஏன் விமர்சிக்கிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர். அதோடு போஸ் வெங்கட் பதிவுக்கு கீழே, "அய்யய்யோ வந்துட்டாரு கலாய்ப்பாரே" என்று விஜய் டிவி ராமர் டெம்ப்ளேட்டை வரிசையாக பதிவிட்டு அவரை மேலும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ரசிகர்கள் முதல்

முன்னதாக விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் புத்தகங்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியிருந்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக ராமர் டெம்ப்லேட் டயலாக்கையும் பயன்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் வைரலானது. ப்ளூ சட்டை மாறன் கூட, மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதுபோல போஸ் வெங்கட்டும் அதே பேச்சை வைத்து விஜய்யை விமர்சித்ததால் இந்த விவகாரம் திமுக vs தவெக ரசிகர்கள் மோதலாக சோசியல் மீடியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+