பதறிய பாகிஸ்தான்.. AI உதவியால் கல்லூரி மாணவர் போட்ட பிளான்! சதியை முறியடித்த அமெரிக்க உளவுத்துறை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை பலரும் தங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்தி வருகின்றனர். தங்களின் தொழில்களை மேம்படுத்த ஏஐ-யை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தானை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் 'கிளாட் ஏஐ'-யிடம் கேட்ட கேள்விகள் அதிர வைத்துள்ளது. தற்போது அவரை சைபர் கிரைம் போலீசார் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் 'ஃபெடரல் புலனாய்வு முகமை' (Federal Bureau Investigation) செயல்பட்டு வருகிறது. இது அமெரிக்காவின் உள்நாட்டு சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் போலீசாகவும், உள்நாட்டு பாதுகாப்பு சார்ந்த உளவுத்துறை அமைப்பாகும் செயல்பட்டு வருகிறது.

Pakistan cyber wing arrests

இந்த உளவுத்துறை சார்பில் பாகிஸ்தானுக்கு முக்கிய வார்னிங் ஒன்று செய்யப்பட்டது. அதில், ''பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பேடியன் ரோடு பகுதியில் வசித்து வரும் ஒருவர் 'கிளாட் ஏஐ' பயன்படுத்தி வெடிகுண்டு தயாரித்து தாக்குதல் நடத்துவது எப்படி?'' என அடிக்கடி கேட்டு வருகிறார் என்று வார்னிங் செய்தது.

இதையடுத்து பாகிஸ்தானின் தேசிய சைபர் கிரைம் விசாரணை அமைப்பு உடனடியாக சுதாரித்து கொண்டு அந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி 17 வயது இளைஞரை கைது செய்தனர். அவர் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருவதும், 'கிளாட் ஏஐ' பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிப்பது பற்றி படித்து வந்ததும் உறுதியான நிலையில் கைது செய்தனர்.

இந்த மாணவர், வெடிகுண்டு எப்படி தயாரிப்பது? அதனை எப்படி அரசு கல்வி நிறுவனத்தில் வைத்து வெடிக்க செய்வது? பெரிய கட்டடத்தை தகர்க்க வேண்டும் என்றால் பொட்டாசியம், அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்டவற்றை வைத்து எப்படி வெடிகுண்டு தயாரிப்பது? என்பது தொடர்பாக 'கிளாட் ஏஐ'-யிடம் கேட்டுள்ளார்.

இந்த ரெய்டின்போது அவரிடம் இருந்த லேப்டாப்-பை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் ஏஐ சாட்பாட்டுடன் அவர் மேற்கொண்ட உரையாடல்கள் தொடர்பான விவரங்கள் இருந்தன. இருப்பினும் அவரது வீட்டில் இருந்து எந்தவிதமான வெடிப்பொருட்களே அல்லது ஆயுதங்களோ எதுவும் இல்லை.

இதுதொடர்பாக பாகிஸ்தானின் தேசிய சைபர் கிரைம் விசாரணை அமைப்பின் கூடுதல் இயக்குர் லாகூர் ஆதிப் அமர் கூறுகையில், ''பாகிஸ்தானில் லாகூரை சேர்ந்த அந்த கல்லூரி மாணவர் 'கிளாட் ஏஐ' உடன் உரையாடியது பற்றிய விவரங்களை அமெரிக்காவின் ஃபெடரல் புலனாய்வு பணியகம் மற்றும் 'கிளாட்' ஏஐ நிறுவனம் ஆகியவை எங்களுக்கு வழங்கின. அதனடிப்படையில் மாணவரை கைது செய்துள்ளோம்.

மாணவர் மீது பாகிஸ்தானின் 'சைபர் குற்றத் தடுப்புச் சட்டம்- 2016 மற்றும் பாகிஸ்தான் தண்டனை சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இளைஞரை இப்படியான கேள்விகள் கேட்க தூண்டியது எது என்பது தொடர்பான விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக உளவியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+