நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு என்ன ஆச்சு.. நடக்கவே கஷ்டப்படுறாரே! கம்பீரமாக இருந்தவருக்கா இந்த நிலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களை பொறுத்த வரைக்கும் சிலரை பார்த்தாலே நமக்கு சிரிப்பு வந்துவிடும். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் ரமேஷ் கண்ணா. படங்களில் தனது இயல்பான காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்தவர். ஆனால் இப்போது இணையத்தில் வெளியாகியிருக்கும் அவருடைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் சற்று கலக்கமடைந்திருக்கிறார்கள்.

அந்த வீடியோவில் காரில் இருந்து இறங்கும் ரமேஷ் கண்ணாவை ஒருவர் கையைப் பிடித்து அழைத்து வருகிறார். அப்போது அவரால் இயல்பாக நடக்க முடியாமல் சற்று சிரமப்படுவது போன்று இருக்கின்றது. பின்னர் அவர் ஒரு இடத்திற்குள் செல்கிறார், அது அலுவலகமா அல்லது ஹோட்டலா என்பது தெளிவாக தெரியவில்லை. அங்கே இருப்பவர்கள் அவருக்கு கை கொடுத்து வரவேற்கின்றனர். அவர்களுடைய கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து செல்லும் ரமேஷ் கண்ணா அங்கிருந்த சோபாவில் அமருகிறார்.

Ramesh Khanna

நடிகர் ரமேஷ் கண்ணா தற்போதைய நிலை

அதற்கு பிறகு அங்கு வந்தவர்களுடன் அவர் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார். இந்த காட்சிகள் தான் இப்போ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. வீடியோ பார்த்த பலர் நம்மை திரைப்படங்களில் சிரிக்க வைத்த ரமேஷ் கண்ணாவுக்கு, "என்ன ஆச்சு? நடக்கவே இவ்வளவு சிரமப்படுகிறார்" என்று வருத்தத்துடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் இந்த வீடியோவை மட்டும் வைத்து அவருக்கு என்ன உடல்நல பிரச்சனை என்பதை நாம் முடிவு செய்து விட முடியாது. அவருடைய உடல்நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. வயது மூப்பு காரணமாக கூட சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்பது போலத்தான் இருக்கிறது. இப்போது ரமேஷ் கண்ணாவுக்கு 70 வயது. இந்த வயதில் உடலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான்.

ஆனால் நமக்கு பிடித்த ஒரு நடிகர் திரையில் துடிப்பாகவும், காமெடியாகவும் பார்த்த ஒருவர் நிஜ வாழ்க்கையில் இப்படி மெதுவாக நடந்து செல்வதை பார்க்கும் போது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ரமேஷ் கண்ணா வெறும் நடிகர் மட்டுமல்ல. இயக்குனர், திரைக்கதை மற்றும் வசனம் என பல துறைகளில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கிய தொடங்கியவர். பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.

காமெடியிலும் கலக்கல்

குறிப்பாக கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கினார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் மூலம் காமெடி நடிகராக ரசிகர்களிடம் கவனம் பெற்ற ரமேஷ் கண்ணா, அதற்குப் பிறகு படையப்பா, நீ வருவாய் என, பிரெண்ட்ஸ், பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், சாமி, தசாவதாரம், வீரம் என பல படங்களில் நடித்திருக்கிறார்.

கேமராவுக்கு பின்னால்

குறிப்பாக பிரெண்ட்ஸ் படத்தில் கிருஷ்ணமூர்த்தியாக அவர் செய்த காமெடியை இன்னைக்கும் ரசிகர்களால் மறந்திருக்க முடியாது. அதேபோல படையப்பா படத்திலும் ரஜினியின் நண்பராக படம் முழுக்க வந்திருப்பார். இயக்குனராகவும் காக்கா கடி, தொடரும் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார். சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடிப்பு மட்டுமல்லாமல் படத்திலும் முக்கிய பொறுப்பாக இருந்திருக்கிறார். முனி, நம் நாடு உள்ளிட்ட படங்களுக்கு வசனங்களும் எழுதி இருக்கிறார்.

அனைவருக்கும் நடப்பது தான்

இப்படி நடிகராக மட்டுமல்லாமல் கேமராக்கு பின்னாலும் பல வருஷங்களாக பயணித்து வருகிறார். இன்றைக்கும் சமூக வலைத்தளங்களில் அவருடைய பழைய காமெடி காட்சியை பார்த்து ரசிக்கும் பலருக்கும் இந்த வீடியோ சற்று வேதனையை ஏற்படுத்தி இருக்கலாம். நாம் திறையில் பார்க்கும் நடிகர்களும் நம்மை போலவே வயதாகும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் உடல் மாற்றங்கள், வயது தொடர்பான சிரமங்களை சந்திக்க வேண்டியது இருக்கிறது. அதை நினைவுபடுத்தும் விதமாக தான் இந்த வீடியோ கூட இருக்கிறது.

நாளைக்கு நமக்கும் வயதாகும், உடலில் மாற்றங்கள் வரும். அதனால் இந்த ஒரு வீடியோவை பார்த்து அவருடைய உடல்நிலை குறித்து தேவையில்லாத வதந்திகளை பரப்பாமல் இருப்பது தான் நல்லது. நம்மை இத்தனை வருட ஆண்டுகளாக சிரிக்க வைத்த ரமேஷ் கண்ணா, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+