கப்பல் ஊழியர் மனைவியுடன் காயல்பட்டினம் ஃபாதர் உறவு? பங்களாவில் உடைந்த கதவு.. 17 பேர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பாதிரியார் மீதான புகாரால் தொடங்கிய பிரச்சினை, இப்போது இரு தரப்பு மோதலாக மாறியுள்ளது... மனைவியுடன் பாதிரியார் நெருக்கமாக பழகியதாக கணவர் யுனோக் புகார் அளித்த நிலையில், பாதிரியார் தரப்பும் பதிலுக்கு புகார் கொடுத்துள்ளது. இப்போது இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

காயல்பட்டினம் சிங்கித்துறை பகுதியை சேர்ந்தவர் யுனோக். கப்பலில் வேலை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் கிடைத்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள செல்வமாதா ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்துக்குப் பிறகு ஜூன் மாதம் கப்பல் பணிக்காக யுனோக் வெளிநாடு சென்றுள்ளார். இதனால் அவரது மனைவி சொந்த ஊரிலேயே இருந்துள்ளார். வேலை காரணமாக வெளிநாட்டில் இருந்த யுனோக், கடந்த நவம்பர் 20-ம் தேதி ஊர் திரும்பியுள்ளார்.

Kayalpattinam Priest Controversy

செல்போனில் அதிர்ச்சி

ஊர் திரும்பிய யுனோக்குக்கு மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.. இதனால் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது செல்வமாதா ஆலயத்தில் பணியாற்றும் பாதிரியார் ஷிவாகருடன் மனைவி நெருக்கமாக பழகியதற்கான உரையாடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மனைவியிடம் யுனோக் நேரடியாகவே கேட்டுள்ளார். அப்போது பாதிரியாருடன் நெருங்கி பழகியதை மனைவி ஒப்புக்கொண்டாராம்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த யுனோக், தான் வெளிநாட்டிலிருந்த நேரத்தில் பாதிரியார் தனது மனைவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

காயல்பட்டி வீட்டில் அட்டூழியம்

பிரச்சனை இத்துடன் முடியவில்லை. பாதிரியாரின் ஆதரவாளர்கள் தனது வீட்டுக்கு வந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாகவும் யுனோக் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாதிரியார் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆறுமுகநேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

யுனோக் அளித்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பங்களாவில் உடைந்த கதவு

இதனிடையே, மனைவியிடம் பாதிரியார் அத்துமீறியதாகக் கூறப்படும் சம்பவத்தால் ஆத்திரமடைந்த யுனோக், தனது அப்பா செல்டன் மற்றும் நண்பர்களான பிரேம், ஜெயக்குமார், பீர் ஆகியோருடன் பாதிரியாரின் பங்களாவுக்கு சென்றிருக்கிறார்.. அங்கு பங்களாவின் கதவை உடைத்து, பாதிரியாரை அவதூறாக பேசினாராம்.. இதுதொடர்பாகவும் சிங்கித்துறை ஊர் நலத்தலைவர் தேவதாஸ் சார்பிலும் பாதிரியார் தரப்பிலும் ஆறுமுகநேரி ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 17 பேர்

இந்தப் புகாரின் அடிப்படையில் யுனோக், அவரது தந்தை செல்டன், நண்பர்கள் பிரேம், ஜெயக்குமார், பீர் ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே யுனோக் அளித்த புகாரில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பாதிரியார் தரப்பின் புகாரில் மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் இரு தரப்பையும் சேர்ந்த மொத்தம் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைரல் வீடியோ

இப்படிப்பட்ட சூழலில் 2 தரப்பினரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ, சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. மனைவியுடன் பாதிரியார் நெருக்கமாக பழகியதாக கூறப்பட்ட புகாரில் தொடங்கிய பிரச்சனை, இப்போது இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

2 தரப்பினரும் அளித்துள்ள புகார்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. விசாரணைக்கு பிறகே இந்தச் சம்பவத்தின் முழுப் பின்னணியும் தெரியவரும்....!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+