அமைச்சர் ரமேஷ் சாப்பிட்டது அசைவமா? 'அவரவர் ஜாதி அவரவர்களுக்கு பெருமை'.. பாஜக நிர்வாகி காட்டம்
சென்னை: ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மட்டன் பிரியாணி சாப்பிட்டதாக திமுக ஆதரவாளர் ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். ஆனால் அவர் அசைவம் சாப்பிடவில்லை என்றும், வேண்டுமென்றே திரித்து வீடியோ பரப்புகிறார்கள் என்றும், சைவமா என்று கேட்டுவிட்டே அவர் உணவை சாப்பிடுவதாகவும் தவெக ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பபதிவில் கூறுகையில், "நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவரகள் ஒரு விழாவில் அசைவ உணவு சாப்பிட்டு விட்டார் என்று ஒரே அலப்பறை. 'ஐயோ'! பிராமண சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர் அசைவ உணவு சாப்பிடுகிறார் என்று சமூக ஊடகங்களில் ஒப்பாரி! அந்த அலப்பறையையும், ஒப்பாரியையும் செய்வது யார் தெரியுமா? 'என் தட்டு, என் உணவு' என ஒப்பாரி வைத்தவர்கள் தான்.

பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அசைவ உணவு உண்டால் 'ஐயோ' என்று அலறுபவர்கள், மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சைவ உணவு பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் பெருமையாக சொல்லிக் கொள்வது தான் விந்தை! நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க அமைச்சர் ரமேஷ் சைவம் உண்கிறாரா? அசைவம் உண்கிறாரா? என்பது ஒரு விவகாரம் அல்ல, அப்படியே அவர் அசைவம் உண்டாலும், 'அவர் தட்டு, அவர் உணவு' என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரவர்கள் ஜாதி அவரவர்களுக்கு பெருமை. மற்ற ஜாதியை சிறுமைப்படுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.உண்மையில் ஜாதிய வெறியர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டோம்" இவ்வாறு கூறியுள்ளார்.
சைவமா? அசைவமா என்று கேட்டு தான் அமைச்சர் சாப்பிடுகிறார் அதற்கான ஆதாரம்தொடர்ந்து பொய்யான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் இந்த I. D https://t.co/DZ8H2c5flu
— ʲᵈᴀʟᴇxᴀɴᴅᴇʀᵗʷᵉᵉᵗˢ (@JDALEXtweets) November 4, 2026
இந்த பதிவினை சிலர் கடுமையாக இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள். ஒரு நெட்டிசன் கூறுகையில், ஒருவரின் உணவுப் பழக்கம் அவருடைய தனிப்பட்ட உரிமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 'என் தட்டு, என் உணவு' என்பது அனைவருக்கும் பொருந்தும் அடிப்படை உரிமை. ஆனால், நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அமைச்சர் ரமேஷ் அசைவம் சாப்பிட்டது ஏன் இவ்வளவு பெரிய விவாதமாகிறது என கேட்ட நாராயணன் திருப்பதி ,இந்த விவாதமே தேவையற்றது என்று கருதினால், அந்த எதிர்வினைகளைப் பற்றி ஒரு நீண்ட பதிவிட்டு, அதில் ஜாதியைக் கொண்டுவந்து விவாதத்தை மேலும் பெரிதாக்க வேண்டிய அவசியத்தை பற்றி விளக்கவேண்டும்.
அமைச்சர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது அவரது உணவுப் பழக்கத்தைப் பற்றிய விவாதத்தில் எதற்காகத் தேவைப்படுகிறது? மற்றவர்களின் உணவுத் தேர்வை விமர்சிப்பதும் தவறு; அதற்குப் பதிலடி கொடுப்பதாகக் கூறி ஜாதியை முன்னிறுத்துவதும் தவறுதான். 'அவரவர் தட்டு, அவரவர் உணவு' என்பதில் உண்மையான நம்பிக்கை இருந்தால், அதை அனைவருக்கும் சமமாகப் பொருத்துவோம். ஜாதியைத் தாண்டி தனிநபர் சுதந்திரத்தை மதிப்பதுதான் உண்மையான சமத்துவம்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
