3 பைலையும் சீக்கிரம் ஓபன் பண்ணுங்க.. விஜய் முன் அரசியல் பேசிய மாணவி.. தவெக விழாவில் நடந்த விஷயம்!
சென்னை: தவெகவின் கல்வி விருது விழாவில் மாணவி ஒருவர் 3 ஃபைல்களை திறக்கப் போகிறீர்கள் என்று அரசியல் பேசி இருப்பது கவனம் பெற்றுள்ளது. கடந்த கல்வி விருது விழாவில் மாணவர்களுக்கு அரசியல் இப்போது தேவையில்லை என்று பேசிய விஜய், இம்முறை திமுக ஊழல் தொடர்பாக பேசி இருந்தார். இதன் காரணமாகவே மாணவர்களும் அரசியல் பேசியதாக பார்க்கப்படுகிறது.
தவெகவின் 2ஆம் கட்ட கல்வி விருது விழா நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. முதல்வர் விஜய் தலைமையில் நடந்த இந்த விருது விழாவில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பங்கேற்றனர். இந்த முறை முதல்வர் விஜய் பேசுகையில், உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் ஊழலை பார்த்துவிட்டு எப்படி சும்மா இருக்க முடியும்? நான் அரசியலுக்கு வந்ததே உங்களுக்காக தான் என்றார்.

அதுமட்டுமல்லாமல், எனக்கு முன் வைத்துள்ள 3 ஃபைல்ஸ் பற்றி கூறினேன்.. திறந்து தான் பாருங்கள் என்று கூறுகின்றனர்.. அறிவுலகமா? ஊழல் உலகமா? என்று தெரியவில்லை. பள்ளிகளின் பாதுகாப்பில் கூட ஊழல் செய்வதா? என்று கேள்வி எழுப்பினார். கடந்த முறை கல்வி விருது விழாவில் விஜய் பேசியதற்கும், இம்முறை பேசியதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது.
நவம்பர் 4ல் நடந்த கல்வி விருது விழாவில் விஜய் பேசுகையில், நான் முதல்வராக வரவில்லை.. அண்ணனாக வந்துள்ளேன்.. 2029 தேர்தலுக்காக நான் இப்போது பேசி வந்திருப்பதாக நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் மாணவர்களாகிய உங்களுக்கு இப்போதைக்கு அரசியல் தேவையில்லை என்று அட்வைஸ் கூறி இருந்தார்.
ஆனால் இம்முறை அந்த பேச்சிற்கு மாறாக விஜய்யே நேரடியாக அரசியல் பேசியுள்ளார். இந்த விழாவில் விஜய் அரசியல் பேசியதன் வெளிப்பாடாக மாணவர்களும் அரசியல் பேசி இருக்கின்றனர். மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பேசுகையில், 3 பைல்ஸ் ஓபன் பண்றேன்னு சொன்னீங்க, சீக்கிரம் ஓபன் பண்ணுங்க.. அத பாக்க நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என்று தெரிவித்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும் மாணவி தவெகவின் மேடையில் அரசியல் பேசி இருப்பது அவருக்கு சில பின்னடைவுகளை உருவாக்க கூடும். பெரும்பாலும் அரசியல் கட்சியினர் மாணவர்கள் மத்தியில் பேசும் போது கூடுதல் கவனத்துடன் பேசுவார்கள். இதனால் முதல்வர் விஜய் கூடுதல் எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.



Click it and Unblock the Notifications
