நீதிமன்றத்திற்கு மரியாதையே இல்லை.. தலைமைச் செயலர் சொன்னா கூட கேட்க மாட்டீங்களா? விளாசிய ஹகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: முதல்வர், பிரதமர் என முக்கிய பிரமுகர்கள் வந்தால் இரவோடு இரவாக சாலைகள் அமைக்கப்படுகிறது. நல்ல சாலை வேண்டுமென்றால் ஒவ்வொரு வாரமும் முதல்வர் பிரதமர் வரவா முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்ற உத்தரவிற்கு மரியாதை கிடையாது பல அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதே இல்லை எனவும் கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்," மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் புதுப்பிப்புப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது.

Madurai Road Works

ஏற்கெனவே உள்ள பழைய தார்சாலையை முறையாக தோண்டி அகற்றாமலும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பழைய சாலையின் அகலத்தைக் குறைத்து புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் சாலைகளின் உயரம் அதிகரித்து, சாலையோரங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பள்ளமாகி, மழைக்காலங்களில் மழைநீர் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சாலைப் பணிகளின் தரம், அகலம், தடிமன் மற்றும் உயரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை மற்றும் இறுதிப் பணப்பட்டுவாடாவை நிறுத்தி வைக்க வேண்டும். இதில் தவறு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள்," தற்போது சாலைகள் ஒழுங்காக போடுவது கிடையாது ஏற்கனவே போடப்பட்ட சாலைக்கு மேல் தாரை ஊற்றி தடவி விட்டு சாலை போடுவதாக கணக்கு காட்டுகின்றனர். ஏற்கனவே போடப்பட்ட சாலையை தோண்டி அதன்பின் சாலை போட வேண்டும் என்பது ஏற்கனவே உள்ள விதிகள் அதனை முறையாக பின்பற்றுவது இல்லை. இவ்வாறு சாலைகள் அமைத்தால் எதிர்காலத்தில் மதுரையை கண்டுபிடிக்க முடியாது.

ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவு உள்ளது. அரசின் விதிகளும் உள்ளது. நீதிமன்ற உத்தரவை தான் அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. உங்கள் துறையின் தலைமைச் செயலாளர் உத்தரவை கூட நிறைவேற்ற மாட்டீர்கள். நீதிமன்றத்திற்கு தான் மரியாதை இல்லை. தலைமைச் செயலாளர் உத்தரவுக்கும் மரியாதை இல்லையா" என்றனர்.

முதல்வர் பிரதமர் என முக்கிய பிரமுகர்கள் வந்தால் இரவோடு இரவாக சாலைகள் அமைக்கப்படுகிறது.
நல்ல சாலை வேண்டுமென்றால் ஒவ்வொரு வாரமும் முதல்வர் பிரதமர் வரவா முடியும்? உயர் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு பகுதிகள் போடப்பட்ட சாலைகள் சில நாட்களிலே காணாமல் போய்விடுகிறது அந்த அளவிற்கு தான் சாலை அமைக்கும் பணி உள்ளது. அரசு ஒப்பந்த பணிகளில் அதிக கமிஷன் பெறக்கூடிய பணியாகவும் சாலை அமைக்கும் பணிகள் உள்ளன.

எனவே மாநகராட்சியின் சாலை அமைக்க ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர், அதனை கண்காணித்த அலுவலர் மதுரை மாநகராட்சியின் தலைமை பொறியாளர், மாநகர ஆட்சியின் ஆணையாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, எவ்வளவு ஒப்பந்தம் தரப்பட்டது? எவ்வளவு தொகையில் சாலை அமைக்கப்பட்டது? அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் அறிக்கையாக நேரில் வந்து தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+