மாமனாரால் கர்ப்பமான மருமகள்.. காதல் கணவர் செய்த காரியம்! கன்னியாகுமரியில் அதிர்ச்சி புகார்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு, கணவர் வீட்டிலேயே பாலியல் கொடுமை நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், தனது மாமனாரே இந்த கொடுமைக்கு காரணம் என்று அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, கணவரும் மாமியாரும் தனக்கு ஆதரவாக இல்லாமல் மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவிக்னேஷ் (25). கூலித் தொழிலாளியான இவர், 21 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் பி.எஸ்.சி. ஏ.ஐ. படித்து வந்தார்.

Kanyakumari Sexual Assault Case

கன்னியாகுமரி மாமனார்

சிறு வயதிலேயே தாயை இழந்த அந்த பெண், தந்தையின் ஆதரவும் இல்லாமல் பாட்டி அரவணைப்பில் வளர்ந்துள்ளார். ஸ்ரீவிக்னேஷை காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணத்துக்கு பாட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த ஜூன் 12-ம் தேதி இருவரும் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு ஸ்ரீவிக்னேஷ் தனது மனைவியுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்துள்ளனர்.

ஸ்ரீவிக்னேஷின் அப்பா செல்வகுமார் (54), முன்பு கராத்தே மாஸ்டராக இருந்தவர். இப்போது அப்பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.

தக்கலை மருமகள்

இந்த நிலையில், ஸ்ரீவிக்னேஷின் மனைவி 2 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதற்காக செக்கப் செய்வதற்காக தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.. தான் கர்ப்பமாக இருப்பதாகவும், கருவைக் கலைக்க வேண்டும் என்றும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

"இப்போதுதானே திருமணமாகியுள்ளது.. அதற்குள் எதுக்காக கருவை கலைக்க வேண்டும்" என்று டாக்டர்கள் காரணத்தை கேட்டுள்ளனர்.. அதற்கு அந்த இளம்பெண், "இந்த கர்ப்பம் என் கணவர் மூலம் ஏற்படவில்லை , மாமனார்தான் இதற்கு காரணம்" என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தது. போலீசாரும் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்... பிறகு போலீசாரிடம் அந்த பெண் புகார் ஒன்றை தந்தார். அந்த பெண் புகாரில் தனக்கு நேர்ந்த மொத்த பிரச்சனைகளையும் விலாவரியாக தெரிவித்துள்ளார்.

கண்டுகொள்ளாத மாமியார்

அதாவது, கடந்த 3 மாதங்களாக மாமனார் செல்வகுமார் இந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தாராம்.. கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வர தாமதமாகியிருக்கிறது.. அப்போது மாமியார் ராஜேஸ்வரியும் கோயிலுக்கு சென்றுள்ளார்..

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாமனார் செல்வகுமார், இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.. இதனால் பயந்துபோன அப்பெண், மாடியிலுள்ள அறைக்கு சென்றுள்ளார்.. ஆனால், அங்கும் சென்ற மாமனார், மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

கணவர் மீதும் புகார்

இதுகுறித்து கணவர் ஸ்ரீவிக்னேஷிடம் செல்போனில் இளம்பெண் அழுதுகொண்டே சொல்லியும், அவர் நம்பவில்லையாம்.. இதற்கு பிறகு, மாமனார் தொடர்ந்து அப்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வரவும், அப்பெண் கர்ப்பமாகியிருக்கிறார். இதுகுறித்து மாமியாரிடம் சொன்னாலும், அவரும் கணவரை போலவே மாமனாருக்கு ஆதரவாக பேசினாராம்..

அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தை வெளியே சொன்னால், மாமனார் தற்கொலையே செய்துகொள்வார் என்று கணவரும், மாமியாரும் மிரட்டியிருக்கிறார்கள்.. அதனால்தான் யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியாமல், கர்ப்பத்தைக் கலைக்க முடிவு செய்து மருத்துவமனைக்கு சென்றதாக அந்தப்பெண் புகாரில் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக மாமனார் செல்வகுமார், 7 முறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக புகாரில் கூறியிருக்கிறார்.

3 பேருமே எஸ்கேப்

இந்த புகாரையடுத்து, மாமனார் செல்வகுமார், கணவர் ஸ்ரீவிக்னேஷ், மாமியார் ராஜேஸ்வரி ஆகிய மூவர் மீதும் மணவாளக்குறிச்சி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த 3 பேருமே தலைமறைவாகி விட்டார்கள்.. அதனால் அவர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைமறைவாக உள்ள மூவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி கொண்டிருக்கிறார்கள்.. மணவாளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+