வல்கர் வாரியர்ஸின் ஏஐ வீடியோ.. அந்த கும்பலுக்கு தவெக தலைமையுடன் தொடர்பு.. சென்னை மேயர் பிரியா ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோசியல் மீடியாவில் தன்னை Targeted Abuse செய்வது தவெக தலைமையின் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல் தான் என்று சென்னை மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ள மேயர் பிரியா, பெண்களுக்கு எல்லாம் தானே பாதுகாப்பு என்று பேசி வரும் விஜய் இதுகுறித்தும் வாய் திறப்பதில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

சென்னை மேயர் பிரியா மீது சோசியல் மீடியாவில் தொடர்ச்சியாக ஆபாச தாக்குதல் நடந்து வருகிறது. தவெக ஆட்சி அமைத்த பின் மேயர் பிரியாவின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் சோசியல் மீடியாவில் அக்கட்சியினர் நக்கல் செய்து வருவது தொடர் கதையாகி இருக்கிறது. அதிலும் அவர் ஹேர் கட் செய்த போது நடந்த சோசியல் மீடியா தாக்குதல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Mayor Priya

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரும் அளித்திருந்தார். தற்போது மேயர் பிரியாவை ஆபாசமாக சித்தரித்து ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. முகம் சுழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோ தவெகவினர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மேயர் பிரியா, இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக் குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசி வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.

அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐ செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு குறித்து தவறாக பேசினாலே நடவடிக்கை எடுப்போம் என்று தவெக கூறி வருகிறது. இதனால் மேயர் பிரியா குறித்து முகம் சுழிக்கும் வகையில் ஏஐ வீடியோ உருவாக்கி வெளியிட்ட நபர்களை காவல்துறை கைது செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தன்னை குறி வைத்து Abuse செய்து வரும் கும்பல் தவெக தலைமையின் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+