மினி எலக்சனுக்கு ரெடி? 5 தொகுதி இடைத்தேர்தல் நடக்குமா? - நாளை காலை தீர்ப்பளிக்கிறது உயர் நீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை கோரித் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை (நவம்பர் 27) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பை வழங்கவுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கும் மேலாகி இருக்கும் நிலையில், தற்போது இடைத்தேர்தல் குறித்த பேச்சுகள் தான் தமிழ்க அரசியல் வட்டாரங்களில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பெரிய தேர்தல் சோதனையாக இந்த இடைத்தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Madras High Court

திருச்சி கிழக்கு

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் வென்ற அவர், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு அதிமுகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த எஸ். ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த பி. சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர்.

5 தொகுதிகள்

இதன் காரணமாக திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானால், பொதுவாக 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. அந்த அடிப்படையில், இந்த 5 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்தன.

சென்னை உயர்நீதிமன்றம்

ஏற்கனவே எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது சபாநாயகரின் முடிவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அந்த வழக்குகள் சபாநாயகரின் விசாரணையில் உள்ளது. மேலும் ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்களும் தனித் தனியாக சபாநாயகர் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் வழக்குகள்

அதே நேரத்தில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என விஜயபாஸ்கர் தரப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கினை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஏற்கனவே இந்த தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்த தடை கோரியும் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது. அப்போது தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.

நாளை காலை தீர்ப்பு

இதை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நாளை காலை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு காலை 10:30 மணிக்கு வழங்க உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானால் இந்த தீர்ப்பு வெளியானால் விரைவிலேயே தேர்தல் தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்பதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+