உபரி சூரியசக்தியை மின்சாரமாக மாற்றப் புதிய மாடல்: மகாராஷ்டிராவின் 2,500 மெகாவாட் ஆர்டிசி டெண்டர்!
மும்பை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதலில் மகாராஷ்டிரா மாநிலம் ஒரு புதுமையான மாடலை அறிமுகம் செய்துள்ளது. பகல் நேரத்தில் உற்பத்தியாகும் உபரி சூரியசக்தியை, நிலையான நம்பகமான மின்சாரமாக மாற்றுவதே இதன் நோக்கமாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் அதிகரித்து வரும் சூழலில், மின் விநியோக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவாலை இந்த மாடல் தீர்த்து வைப்பதாக பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மின்சார விநியோக நிறுவனம் தரப்பில் நடப்பாண்டில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு 2,500 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மற்ற மின் உற்பத்தி ஆதாரங்கள் மற்றும் சேமிப்பு வசதிகளுடன் இணைப்பதன் மூலமாக 5 ஆயிரம் மெகா வாட் உறுதியற்ற சூரியசக்தி திறனை 2,500 மெனா வாட் நிலையான மின்சாரமாக இந்த டெண்டர் மாற்றி உள்ளது.

அதேபோல் வழக்கமான மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் போல் அல்லாமல், விநியோக அடிப்படையிலான ஏற்பாடு காரணமாக, டெண்டர் எடுப்பவர்கள் பிரத்யேக மின் உற்பத்தி சொத்துக்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விநியோகம் செய்யும் நிறுவனம், பல உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் இருந்து மின்சாரத்தை பெறலாம்.
ஆனால் மின்சார விநியோகத்தை எந்தவித தடையும் இன்றி செய்து முடிக்க வேண்டும். அதிலும் குறைந்தபட்சம் 51% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்கு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்தை எப்படி பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாடு மகாராஷ்டிரா மாநில மின்சார நிறுவனம் வசமே உள்ளது.
இந்த டெண்டருக்கான போட்டியில் 4 நிறுவனங்கள் பங்கேற்றன. 6,250 மெகா வாட்டிற்கு குறைந்தபட்ச தொகையாக அதானி பவர் லிமிடெட் தரப்பில் ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.6.30 என்று கோரப்பட்டது. இதனால் அதானி பவர் லிமிடெட் நிறுவனம் டெண்டரை கைப்பறிஉஅது. அதற்கான ஒப்பந்தம் கடிதமும் அளிக்கப்பட்டுவிட்டது.
இந்திய மின்சார சந்தையில் மிக முக்கியமான மாடலாக 9இந்த திட்டம் அமைந்துள்ளது. சூரியசக்தி உற்பத்தி பகல் நேரங்களில் உச்சத்தை எட்டுகிறது. ஆனால் சூரியன் மறைந்த பிறகும் மின் தேவை தொடர்கிறது. உபரி சூரியசக்தியைச் சிறப்பாகப் பயன்படுத்துவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முடக்கத்தை குறைக்கவும், மின் பரிமாற்றக் கட்டமைப்பின் பயன்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
மகாராஷ்டிராவின் இந்த மாடலை மேற்கு வங்க அரசும் பின் தொடர்ந்துள்ளது. இந்தியாவின் சூரியசக்தித் திறன் விரிவடைந்து வருவதால், தூய்மையான எரிசக்தி இலக்குகளுக்கும் நம்பகமான, மலிவு விலையிலான மின்சாரத்திற்கான தேவைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதில் இதுபோன்ற ஏற்பாடுகள் முக்கியத்துவம் பெறும் என்று பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
