அரியர் க்ளியர் பண்ண அரிய வாய்ப்பு.. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு குட் நியூஸ்! வெளியான அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்புக் கல்லூரிகளில் 2008, 2013 மற்றும் 2017ஆம் ஆண்டு பாடத்திட்ட விதிகளின்படி இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. படிப்பை முடிப்பதற்கான அதிகபட்ச காலக்கெடு முடிவடைந்ததால், அரியர் தேர்வுகளை எழுத முடியாமல் தவித்து வந்த மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தகுதியுள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் 2008, 2013 மற்றும் 2017-ம் ஆண்டு விதிமுறைகளின்படி இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்த சில மாணவர்கள், பல்கலைக்கழகம் நிர்ணயித்த அதிகபட்ச காலத்திற்குள் தங்களது படிப்பை முழுமையாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Anna University Arrear Exam education

இதனால், மீதமுள்ள அரியர் பாடங்களுக்கான தேர்வுகளை எழுதும் தகுதியையும் அவர்கள் இழந்துள்ளனர். மாணவர்களின் கல்வி நலன், வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்தச் சிறப்புத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

ஆன்லைன் பதிவு எப்போது தொடங்கும்? இந்தச் சிறப்புத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு தொடக்கம்: 25.11.2026, பதிவு செய்ய கடைசி நாள்: 10.12.2026, தேர்வு அட்டவணை வெளியீடு: 15.12.2026,தேர்வுகள் தொடக்கம்: 21.12.2026, மாணவர்கள் இந்தக் கால அட்டவணையைப் பின்பற்றி, கடைசி தேதிக்குள் தங்களது பதிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தச் சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள மாணவர்கள் ரூ.5,000 பதிவு கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் தன்னாட்சி , தன்னாட்சி அல்லாத என இரு வகையான இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தும். மேலும், தன்னாட்சி அல்லாத இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒவ்வொரு அரியர் பாடத்திற்கும் கூடுதலாக ரூ.150 தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும். தகுதியுள்ள மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக இணையதளமான coe.annauniv.edu என்ற முகவரியில் சென்று சிறப்புத் துணைத் தேர்வுக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம் என அண்ணா பல்கலைக் கழகம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+