நீங்க கண்டிப்பா செய்வீங்கனு நம்புறேன்.. சிஎம் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் எழுதிய கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பவும், நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைவாக நடத்தவும் முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வுக் குழுவில் யுஜிசி தலைவரின் பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்றும் ஆளுநர் அக்கடித்தத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்," தமிழகத்தின் பல மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக இருக்கிறது. இதனால் பல்கலைக்கழகங்களின் அன்றாட நிர்வாகப் பணிகள் மட்டுமின்றி, கல்வி சார்ந்த நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகிறது.

தற்போது பல்கலைக்கழகங்களின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்காக தமிழக அரசு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது. ஆனால், ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித்தனியாக இருக்கும் நிர்வாக மற்றும் கல்வித் தேவைகளை இந்த ஏற்பாட்டால் முழுமையாகக் கையாள முடியவில்லை.

Governor Vijay Vice Chancellor

ஆளுநர் அர்லேகர்

எனவே, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகச் சட்டங்கள் மற்றும் யுஜிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு முழுநேர துணைவேந்தர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டப்படிப்பை முடித்துவிட்டு பட்டமளிப்பு விழாவுக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பட்டமளிப்பு விழா

எனவே, சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைவாக நடத்த ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித்தனியாக கால அட்டவணை தயாரிக்க வேண்டும். ழ்ணைவேந்தர் நியமனத்தில் முக்கியப் பிரச்சினையாக இருப்பது தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவின் அமைப்பு குறித்த விவகாரம்தான். குறிப்பாக, யுஜிசி 2018 விதிமுறைகளின் 7.3(ii) பிரிவின்படி, தேர்வுக் குழுவில் யுஜிசி தலைவரின் பிரதிநிதியைச் சேர்ப்பது தொடர்பாக தமிழக அரசுக்கும் ஆளுநர் தரப்புக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆளுநர்-வேந்தர்

இந்தச் சூழலில், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் செயலர் தொடர்பான டாக்டர் எஸ். மோகன் வழக்கில் உச்ச நீதிமன்றம் 2026 ஜனவரி 30-ம் தேதி வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அப்போதைய ஆளுநர்-வேந்தர் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், துணைவேந்தர் தேர்வுக் குழுக்களில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும் என்றும், தொடர்புடைய நீதிமன்ற வழக்குகளின் முடிவு வரும் வரை ஏற்கெனவே நடைபெற்று வந்த தேர்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதை அவர் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

துணைவேந்தர் நியமனம்

இந்த விவகாரத்துக்கு பரஸ்பர ஆலோசனை மூலம் தீர்வு காணவும், வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான துணைவேந்தர் நியமன முறையை உருவாக்கவும் ஆளுநர் சில பரிந்துரைகளை முன்வைக்கிறோம்.

பிரதிநிதி குழு

ஆளுநர் தரப்பில் ஒரு பிரதிநிதி, பல்கலைக்கழக சிண்டிகேட் சார்பில் ஒரு பிரதிநிதி, யுஜிசி தலைவர் சார்பில் ஒரு பிரதிநிதி, தமிழக அரசு சார்பில் ஒரு பிரதிநிதி, இந்தக் குழு சம்பந்தப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட வேண்டும். இதில் இடம்பெறும் உறுப்பினர்கள் சிறந்த கல்வியாளர்களாகவும், நேர்மையும் தொழில்முறை நற்பெயரும் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

தேர்வுக் குழு

துணைவேந்தர் பதவி காலியாகும் என எதிர்பார்க்கப்படும் தேதிக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பே தேர்வுக் குழு அமைக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். குழு அமைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களுக்குள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து, நேர்காணல் உள்ளிட்ட தேர்வு நடவடிக்கைகளை முடிக்க வேண்டும்.

முதல்வர் விஜய்

துணைவேந்தர் தேர்வில் முக்கியமான அம்சமாக, தேர்வுக் குழு ஒருமித்த முடிவின் அடிப்படையில் தகுதியான மூன்று பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு முன்னுரிமை வரிசைப்படி தரவரிசை வழங்கிப் பரிந்துரைக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் நலன் மற்றும் பட்டத்துக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். தமிழக அரசு மற்றும் ஆளுநர் மாளிகை இடையே துணைவேந்தர் நியமனம் தொடர்பாக நீடித்து வரும் கருத்து வேறுபாடுகளுக்கு பரஸ்பர ஆலோசனை மூலம் சட்டரீதியான தீர்வு காண முடியும்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+