Gold Rate Today: ரூ.1840 உயர்வு.. ஒரே நாளில் இரண்டு முறை எகிறியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சில நாட்களாகவே சரிந்து வந்த நிலையில், நேற்றைய தினம் திடீரென அது அதிகரித்தது. சர்வதேச சந்தையில் நடந்த சில மாற்றங்கள் காரணமாகவே தங்கம் விலை இப்படி உயர்ந்தது. இன்றைய தினம் காலையில் ரூ.480 உயர்ந்த தங்கம் பிற்பகலில் மேலும் ரூ.1360 உயர்ந்ததுள்ளது. இதனால் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையை பொறுத்தவரை கடந்த 10 நாட்களில் 7 நாட்களில் தங்கம் விலை சரிந்துள்ளது. இப்படி தொடர்ந்து சரிந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சியாக தங்கத்தை வாங்க ஆரம்பித்தனர். ஆனால், கடந்த சில நாட்களில் அதன் டிரெண்ட் மாறுவது போல தெரிந்தது. நான்கு நாட்களில் 3 நாட்கள் அதன் விலை உயர்ந்தது.

Gold Price Gold

சர்வதேச சந்தை

இதற்கு சர்வதேச அளவில் நடக்கும் மாற்றங்களே முக்கிய காரணமாக இருக்கிறது. நேற்று முன்தினம் அமெரிக்காவில் பணவீக்கம் சார்ந்து முக்கியமான டேட்டா வெளியானது. அதில் பணவீக்கம் எதிர்பார்ப்பை காட்டிலும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பணவீக்கம் அதிகம் என்றால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்.

அப்படி வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வட்டி வருவாய் தராத தங்கத்தின் மீது பெரியளவில் முதலீடு செய்ய மாட்டார்கள். அதற்கு பதிலாக வட்டி வருமானம் தரும் கடன் பத்திரங்களில் முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்வார்கள். இதனால் தங்கம் விலை தானாகவே சரிய ஆரம்பிக்கும். இதனால் தான் பணவீக்க டேட்டா வந்தவுடன் சர்வதேச சந்தையில் விலை தடாலடியாக குறைந்தது. பணவீக்க டேட்டா வந்த சில நிமிடங்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3500 டாலரில் இருந்து 3430 டாலர் வரை சரிந்தது.

என்ன நடந்தது

இதனால் நேற்று இந்தியாவிலும் தங்கம் விலை பெரியளவில் சரியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓவர்நைட்டில் சர்வதேச சந்தை மொத்தமாக மாறிவிட்டது. சரிந்த வேகத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துவிட்டது. 3300 டாலரில் இருந்து மீண்டும் 3500 டாலரை தொட்டுவிட்டது. நைட் முழுக்க அதே நிலையில் தான் நீடித்தது. இதன் காரணமாகவே நேற்றைய தினம் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தது.

அமெரிக்காவில் டிசம்பர் முதல் வாரம் பெடரல் ரிசர்வ் கூட்டம் நடைபெறுகிறது. அதில் வட்டி விகிதம் உயர்த்தப்படவே வாய்ப்பு அதிகம். அப்போது தங்கம் விலை சரியும். அடுத்தாண்டும் கூட பணவீக்கம் கட்டுக்குள் வரும் வரை அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை குறைக்காது. அதுவரை தங்கம் விலையில் தொடர்ந்து பெரிய ஏற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றே வல்லுநர்கள் தெரிவித்தனர்.

தங்கம் விலை

நேற்றைய தினம் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.960 உயர்ந்து ரூ.92,320-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ.11,540-க்கு விற்பனையானது. வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் இன்றைய தினம் தங்கம் விலை உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.480 உயர்ந்து, ரூ.92,800க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. காலையில் ரூ.480 உயர்ந்த தங்கம் பிற்பகலில் மேலும் ரூ.1360 உயர்ந்தது. இதன் மூலம் ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை ரூ.1840 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.170 உயர்ந்து ரூ.11,770க்கு விற்பனையாகிறது.


கடந்த சில நாட்களாக தங்கம் விலை

27-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.94,160 (பிற்பகல்)

27-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,800 (காலை)

26-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,320

25-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.91,360

24-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.93,720

23-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,800

22-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,800

21-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.91,720

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+