December Matha Palan: ரிஷப ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. சொந்த வீடு யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டும் மாதம்

Subscribe to Oneindia Tamil

December matha rasi palan: நவம்பர் மாதம் நிறைவடைந்து டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. மாதத்தின் ஆரம்பத்திலேயே நிழல் கிரகங்களான ராகு கேதுவின் பெர்ச்சியும் நடைபெறவுள்ளது. இது 12 ராசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, டிசம்பர் மாதத்தில் ரிஷப ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வேலை, தொழில், குடும்பம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே ராகு கேதுக்கள் கும்பம், சிம்ம ராசியில் இருந்து மகரம், கடகத்திற்கு மாறக்கூடிய அமைப்பு 12 ராசிக்காரர்களுக்கும் சாதகமான அமைப்பைக் கொடுக்கும். மாதம் முழுவதும் சிம்மத்தில் குருவும், செவ்வாயும் மங்கள யோகத்தில் சேர்ந்திருப்பது நல்லவிதமான அமைப்பு. மருத்துவம், கட்டடம், நெருப்பு, விளையாட்டு, அதிகாரம் போன்ற தொழில்களைக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல வருமானங்கள் இருக்கும்.

december-matha-palan-2026-what-benefits-will-rishabam-rasi-receive-this-month

குருவும், சுக்கிரனும் துலாம் வீட்டில் இருப்பது நன்மையைத் தரும். புதன் பகவான் குருவின் பார்வையில் டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருக்கும். அந்த வகையில், ரிஷப ராசியினருக்கு இந்த டிசம்பர் மாதத்தில் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு மாதம் முழுவதும் 12 ஆம் இடம் சுபத்துவமாக இருக்கிளது. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் உங்கள் யோகாதிபதியான புதன் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். புதனும், சுக்கிரனும் நன்றாக இருப்பதால் 6 மாத காலத்துக்கு சனி உங்களுக்கு 11 ஆம் இடத்தில் இருப்பது மிகப்பெரிய மேன்மையைத் தரும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

வருமானம் பெருகும்

12 ஆம் இடம் வலுப்பெற்றுள்ளதால் சுப விரயங்கள் இருந்தாலும் அதற்கேற்ப வருமானங்கள் வரும். டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் 8 இல் மறைந்தாலும் குருவின் பார்வையில் இருப்பதால் வண்டி வாகனங்களில் செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய அமைப்பு ஏற்படும். வாகன மாற்றங்கள் ஏற்படும்.

முன்னேற்றம்

12 ஆம் பாவகங்கள் மிகவும் சுபத்துவமாக இருப்பதால் வெளிநாடு, வெளிமாநிலம் என தூர இடத்தில் இருக்கக்கூடிய ரிஷப ராசியினருக்கு மிகப்பெரிய நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வீடு கட்டுவது, சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் ஏற்படும் 10 ஆம் இடம் நன்றாக இருப்பதால், குரு பார்ப்பதாலும் வியாபாரிகள், தொழில் செய்வோருக்கு நல்லவை நடக்கக்கூடிய தன்மை ஏற்படும்.

பாதிப்புகள் நீங்கும்

இரும்பு சார்ந்த விஷயங்கள், துப்புரவுப் பணியாலர்கள், மாநகராட்சி, நகராட்சிப் பணிகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்ல மாற்றம் ஏற்படும். பணி அழுத்தங்கள் குறையும். பெரிய அளவில் இந்த மாதம் எந்தவித கஷ்டமும் இருக்காது. வரும் 3 ஆண்டுகளுக்கு சனி சாதகமான இருக்கும் காரணத்தால் பெரிய பாதிப்புகள் இருக்காது. தொட்டது துலங்கக்கூடிய அமைப்பு.

யோகம் கொட்டும்

15 ஆம் தேதிக்குப் பிறகு புதன் 8 ஆம் இடத்திற்குப் போவது எதிர்பாராத அதிர்ஷ்டம், நன்மைகளைத் தரும். பணம் திரும்பிக் கிடைப்பது, வர வேண்டிய பணம் வந்து சேருவது, பங்குச் சந்தை கை கொடுப்பது, எதிர்பார்க்காத அறிமுகங்கள் என யோகங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும், மேன்மையும் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+