திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு கலைப்பு.. முன்னாள் நீதிபதி வசம் கோயில் பொறுப்பு.. உச்சநீதிமன்றம்!
டெல்லி: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும் அறங்காவலர் குழுவை கலைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கோயிலும் நிர்வாக பொறுப்பை மேற்கொள்ள முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் தலைமையில் கோயில் நிர்வாகக் குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளனர்.
நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் தரப்பில் உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றம் வழக்கில் உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்கு பின் உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் நடத்தையால் நிர்வாகக் குழப்பம் ஏற்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. நீதிமன்ற உத்ய்தரவை பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பாக பார்க்க கூடாது. நீதுமன்ற உத்தரவை நீதிமன்றமே மாற்றும் வரை அதை மீற முடியாது.
அதேபோல் மாநில அரசும் கோயில் நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளன. இது நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாகவும், துணிச்சலாகவும் மீறிய செயலாகும். கோயில் நிர்வாகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நீதிமன்ற உத்தரவுக்கு தவறான விளக்கம் அளித்து வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது.
இதனால் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் ஒவ்வொரு பக்தரும் நாளை தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிடுகிறோம். மலை அமைந்துள்ள முழு பகுதியையும் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படையினை நிறுத்தவும் உத்தரவிடப்படுகிறது. தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம்.
அதேபோல் உச்சநீதிமன்ற முந்தைய உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் அறங்காவலர் குழுவை கலைக்கிறோம். கோயில் நிர்வாக பொறுப்பை மேற்கொள்ள முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் தலைமையில் கோயில் நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
