அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி.. 3 தொகுதிகளுக்குத் தடை நீடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சி 6 மாதங்களை கடந்துவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்று என சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீதான புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் 6 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க தவெக தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம். 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

By election Judgement


இடைத்தேர்தல் தடை வழக்கு

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அவர்கள் தவெகவில் இணைந்ததை சட்டப்படி ஏற்கப்பட்டதாக நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கொளத்தூர் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் தவெக ஈடுபட்டுள்ளது. தவெகவை தோற்கடிக்க திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகின்றன.

முன்னதாக தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை எதிர்த்தும் அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனிடையே 5 தொகுதி முடிவுகள் தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகள் முடியும் வரை, இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வெங்கடாச்சலம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இன்று தீர்ப்பு

இதில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானால் அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. 6 மாதங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. கடந்த மாதம் நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மற்ற 3 தொகுதிகளான திருச்சி கிழக்கு, கரூர், விராலிமையில் தேர்தல் வழக்கு முடிந்த பிறகுதான் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+