விஜய் டிவி ராமர் டயலாக்கை பேசிய முதல்வர் விஜய்.. உடனே அவர் வெளியிட்ட பதிவு! குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரையில் ஒரு காமெடி டயலாக் எவ்வளவு பெரிய அளவுக்கு பிரபலமாகும் என்பதற்கு இப்போது ராமர் பேசிய வசனமே உதாரணமாகிவிட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ராமர் பேசிய, "அய்யய்யோ... வந்துட்டாரே.. கலாய்ப்பாரே.." என்ற டயலாக் சமீப காலமாக உதயநிதி ஸ்டாலினை கலாய்ப்பதற்காக விஜய் ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அந்த வசனத்தை தமிழக முதல்வர் விஜய்யே மேடையில் பயன்படுத்தி இருப்பது அந்த டேப்லெட்டுக்கு இன்னும் பெரிய கவனத்தை கொண்டு வந்திருக்கிறது.

10ம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய விஜய் புத்தகங்கள் தொடர்பான ஊழல் குற்ற சாட்டுகளை முன்வைத்த போது எதிர் கட்சியினர் பைல்களை திறந்து பார்க்க சொன்னது குறித்து பேசினார். அப்போது முதலில் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டு, "அய்யய்யோ.. வந்துட்டாரே.. கலாய்ப்பாரே.." என்று ராமர் பாணியில் பேசி அதற்கேற்ற முக பாவனைகளையும் செய்து காட்டினார்.

Ramar Cooku With Comali Vijay Udhayanidhi Stalin

ராமர் டயலாக் பேசிய முதல்வர்

இந்த வீடியோ வெளியானதும் ரசிகர்கள் அதை பெரிய அளவில் வைரலாக்கி வந்தனர். இதுவரை உதயநிதி ஸ்டாலின் தொடர்பான பதிவுகளிலும் அவருடைய பேச்சுக்களிலும் இந்த ராமர் டெம்ப்ளேட்டை விஜய் ரசிகர்கள் பயன்படுத்தி கிண்டல் செய்து வந்த நிலையில் இப்போது முதல்வரே அந்த வசனத்தை பேசியதால் விஜய் ரசிகர்கள் அதை உற்சாகமாக பகிர்கிறார்கள். அதே நேரத்தில் திமுகவினர் முதல்வர் பேசியதை எதிர்த்து, கண்டித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

Ramar Cooku With Comali Vijay Udhayanidhi Stalin

குக் வித் கோமாளி டயலாக்

இப்படி விவாதம் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த டெம்ப்ளேட்டுக்கு சொந்தக்காரரான ராமரும் விஜய் பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதோடு, "முதலமைச்சர் வரை எல்லோருமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்" என்று கேப்ஷனையும் அவர் கொடுத்திருக்கிறார். அவருடைய இந்த பதிவு தற்போது ரசிகர்களிடமும் கவனம் பெற்று வருகிறது.

Ramar Cooku With Comali Vijay Udhayanidhi Stalin

ராமர் வெளியிட்ட பதிவு

ராமர் ஒரு காமெடி நடிகராக சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் பேசும் வசனங்கள், வித்தியாசமான காமெடி என பல விஷயங்கள் ரசிகர்களுக்கு பிடித்ததாக இருந்தது. அதிலும் மாகாபாவை கலாய்ப்பதற்காக அவர் பேசிய அய்யய்யோ வந்துட்டாரே கலாய்ப்பாரே என்ற ஒரு டயலாக் இப்போ சோசியல் மீடியாவில் கொடிகட்டி பறக்கிறது.

Ramar Cooku With Comali Vijay Udhayanidhi Stalin

ராமர் அந்த வீடியோவை பகிர்ந்து இருப்பதும் இந்த பின்னணியின் சுவாரஸ்யமாக பார்க்கப்படுகிறது. ஒரு காமெடி நிகழ்ச்சியில் பேசிய வசனம் இவ்வளவு பெரிய அரசியல் விவாதத்துக்கு வந்து நிற்கும் நிலையில் அந்த வசனத்தை உருவாக்கிய காமெடி நடிகரே, முதல்வர் பேசியதை பகிர்ந்து இருக்கிறார். அதே நேரத்தில் முதல்வர் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் இனி என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் அவருடைய தொண்டர்களுக்கு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+