Udhayanidhi Birthday: ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி.. அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது 50 ஆவது பிறந்த நாளையொட்டி, தனது தந்தையும், திமுக தலைவருமான முக ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி, முதல்வரும் தந்தையுமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

லட்சியப் பணத்தில் சிறந்திடு தம்பி
உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது.
உழைப்பால் உயர்ந்திடு
கழத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்!. Let your work define you! உழைப்பால் உயர்ந்திடு! இலட்சியப் பாதையில் முன்னேறு! கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு! என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
