முகமது ஷமி, சர்ப்ராஸ் வரிசையில் சிராஜ்.. மீண்டும் அரசியல் செய்த கம்பீர்? இந்திய அணியில் நடப்பது என்ன?
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இந்திய அணியில் மீண்டும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக குர்னூர் ப்ரார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் 6வது பவுலிங் வாய்ப்பாக மட்டுமே சிராஜ்ஜை கம்பீர் பார்ப்பதாக தெரிகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இளம் வேகப்பந்துவீச்சாளர் குர்னூர் ப்ரார் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் நட்சத்திர வீரர் முகமது சிராஜ் சேர்க்கப்படவில்லை.

ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் சேர்க்கப்படாதது கடுமையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் போட்டியில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு குர்னூர் ப்ரார் சேர்க்கப்பட்டுள்ளார். இம்முறையும் சிராஜ் சேர்க்கப்படவில்லை. இந்த தொடரில் இந்திய அணி மொத்தமாக 5 வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருக்கிறது.
முதன்மையான இந்த 5 வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, ஆகாஷ் தீப், அன்சுல் கம்போஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார் ஆகியோர் இருக்கின்றனர். இவர்களை கடந்து சிராஜ் 6வது பவுலராகவே இருக்கிறார். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் சிராஜ் 2வது இடத்தில் இருக்கிறார்.
பும்ரா இந்திய அணிக்காக விளையாடாத போது சிராஜ் அந்த இடத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்தியாவில் சிராஜ் அற்புதமாக செயல்பட்டுள்ளார். இதனால் சிராஜ் நீக்கப்பட என்ன காரணத்தை இந்திய அணி வைத்துள்ளதே என்பதே புரியாத புதிராக உள்ளது.
இன்னொரு பக்கம் முகமது ஷமி, சர்க்ஃபராஸ் கான் வரிசையில் சிராஜ் குறி வைக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளன. ஏனென்றால் நியூசிலாந்து தொடருக்காக சிராஜ் சுமார் 2 மாதங்களாக தயாராகி வருகிறார். லெந்த், வேகம் என்று சிராஜ் உச்சக்கட்ட ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸில் இருந்த போதும், அவர் பெஞ்ச் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
