விஜய்க்கு அன்று நாங்க தேவை.. இன்று தேவையில்லையா.. கம்யூனிஸ்ட்கள் நிலை.. போட்டுடைத்த வீரபாண்டியன்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. எதிர்க்கட்சிகள் தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தவெக புகார் கூறுகிறது. விஜய்க்கு, அன்றைக்கு எங்கள் ஆதரவு தேவைப்பட்டது. இப்போது தேவைப்படாமல் போகலாம் என்று கூறி தங்களின் நிலைப்பாட்டை சிபிஐ வீரபாண்டியன் மேடையில் போட்டு உடைத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன்," நாங்கள் தவெக கூட்டணியில், அமைச்சரவையில் இடம்பெறவில்லை. வெளியில் இருந்துதான் ஆதரித்துள்ளோம். மதச்சார்பின்மையில் உறுதியாக இருங்கள் என்று ஆதரவு வழங்கும்போது கூறினோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் உறுதியாக இருந்துள்ளார். வாழ்த்துகள். தமிழ்நாட்டின் உழைக்கும் மக்கள் நலன் முக்கியம். அவ்வளவு தான் எங்கள் நோக்கம்.

Vijay Veerapandiyan

அன்றைக்கு தேவை இன்றைக்கு தேவையில்லையா

வெளியில் இருந்து அரசை ஆதரிக்கிறோம். தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம் கண்டிக்கிறோம். சரி என்றால் ஆதரிக்கிறோம். மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு விடுமுறை உள்ளது. தாய் மட்டுமல்ல அந்த காலத்தில் தாய், சேயை கவனிக்க வேண்டியது கணவனின், தந்தையின் கடமை. ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை வழங்குவோம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. நல்லது என்றால் வரவேற்கிறோம்.

ஆதரிப்பதாலேயே எல்லாவற்றையும் ஏற்க முடியுமா. அது முடியாது. நாங்கள் தவறை சுட்டிக் காட்டுவோம். எதிர்ப்போம். அன்றைக்கு சகோதரர் விஜய்க்கு எங்களின் ஆதரவு தேவைப்பட்டது. இப்போது எங்கள் ஆதரவு தேவைப்படாமல் போகலாம். ஆதரவு தேவைப்பட்டாலும், தேவைப்படாவிடினும் கம்யூனிஸ்ட்கள் என்றைக்கும் அரசின் பக்கம் இல்லை. உழைக்கும் மக்களின் பக்கம் என்பதை அன்றைக்கும் சொல்கிறோம், இன்றைக்கும் சொல்கிறோம்.

அதிமுகவுக்கு ஏற்பட்ட பாதிப்பு

தேர்தலில் ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றிருக்கலாம். திமுகவுக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள். விரும்பவில்லை என்றால் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். அது வெகுமக்களின் இயக்கம். ஜனநாயக இயக்கம். இந்தமுறை ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை. அதிமுக, பாஜகவுடன் நிற்கிறது. எனவே யாருக்கு வாக்களிக்கலாம் என்று யோசித்து விஜய்க்கு வாக்களித்துள்ளனர். பாஜகவுடன் இணைந்ததால் அதிமுக ஆட்சியை இழந்துள்ளது.

அந்த கூட்டணியால் நாட்டிற்கும், அதிமுகவுக்கும் எந்த பலனும் இல்லை. தவெக, திமுக, அதிமுக ஜனநாயக சக்தியாக பலப்பட வேண்டும். இதை நாங்கள் கூட்டணிக்காக சொல்லவில்லை. எங்களுக்கு ஆர்எஸ்எஸ் பாஜக தான் அரசியல் பகை முரண். எங்களுக்கு எதிரான கருத்தியில் போரை பிரதமர் தொடங்கியுள்ளார். அவர்களுடனான கருத்தியில் போருக்கு நாங்கள் தயார். எங்களின் வலு ஜனநாயக சக்திகள். நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் எங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்போம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+