தலித், முஸ்லிம்களுக்கு 50% அரசு ஒப்பந்தம் தருவோம்.. பாஜகவை காலி செய்ய அகிலேஷ் போட்ட தரமான கணக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அங்குள்ள PDA சமூகத்தினரை அகிலேஷ் யாதவ் குறிவைத்திருக்கிறார். அந்த சமூகத்தினரின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தனக்கு வர வேண்டும் என்பதற்காகவே அவர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக மற்ற கட்சிகளைவிட சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தான் முதல் நபராக ரெடியாகி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கிய அவர், தேர்தல் யூகங்களையும் வடிவமைக்க ஆரம்பித்தார்.

Uttar Pradesh election 2026 Akhilesh Yadav Uttar Pradesh

அகிலேஷ் யாதவ்

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முதலில் சுமுகமாக சென்றாலும் கூட காங்கிரஸ் இடையே இழுத்தடித்தது. அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் சட்டென 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த தேர்தலை அவர் எந்தளவுக்கு சீரியஸாக எடுத்து கொண்டுள்ளார் என்பதையே இது காட்டுகிறார்.

PDA வாக்குகள்

இப்படி கூட்டணி கணக்கை ஒருபுறம் கவனித்து வரும் அகிலேஷ், மறுபுறம் பாஜகவுக்கு எதிராக PDA வாக்குகளை ஒருங்கிணைக்கும் வேலையிலும் இறங்கியுள்ளார். இதற்காகவே தனது தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் PDA என்பது பிற்படுத்தப்பட்டோர் (Pichhde), தலித்துகள் (Dalits), சிறுபான்மையினர் (Alpsankhyak) ஆகியோரை உள்ளடக்கிய அரசியல் கூட்டணி. இந்த மூன்று பிரிவினரையும் ஒரே வாக்கு வங்கியாக திரட்டுவதுதான் அகிலேஷின் முக்கிய டார்கெட். நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளும் இந்த கணக்கை மையமாக வைத்தே அமைந்துள்ளன.

இரண்டு விஷயங்கள்

இதில் இரண்டு விஷயங்கள் ரொம்பவே முக்கியமானது. முதலில் மாநிலம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது. அதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவோம் எனன வாக்குறுதி அளித்துள்ளார். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமைகளையும் வாய்ப்புகளையும் பெற முடியும் என்பது அவர்களின் கருத்து!

அடுத்து ரூ.50 கோடி வரையிலான அரசு ஒப்பந்தங்களில் 50 சதவீதத்தை தலித்துகள் மற்றும் PDA சமூகத்தினருக்கு ஒதுக்குவோம் என்பது அகிலேஷின் அடுத்த முக்கிய வாக்குறுதி. இதன் மூலம் பிஸ்னஸ்களில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கருதும் இந்த சமூகத்தினருக்கு நேரடி பலன் கிடைக்கும். இந்த இரண்டுமே PDA வாக்குளை கவர அகிலேஷ் போட்டுள்ள முக்கியமான கணக்கு.

இளைஞர்கள்

இத்தோடு அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் அரசு வேலைகளையும், 2 முதல் 3 கோடி தனியார் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவோம் என அவர் அறிவித்துள்ளார். மேலும், படித்து முடித்தும் வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். அரசு வேலைக்கான ஆட்சேர்ப்பு 3 முதல் 6 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும், வினாத்தாள் லீக் ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இவை அங்குள்ள இளைஞர்களை கவரும் வகையிலான வாக்குறுதிகள்,

இத்தோடு இளைஞர்களை கவரும் வகையில், அக்னிவீர் திட்டம் முடிந்து, நிரந்தர பணியில் சேர முடியாதவர்களுக்கு உத்தர பிரதேச காவல்துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

முக்கியம்

ஏழைகள் மற்றும் பிடிஏ சமூகத்தினரை குறிவைத்து மற்றொரு வாக்குறுதியையும் அவர் கொடுத்திருக்கிறார். அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு, ஏழைகள் மற்றும் PDA சமூகத்தினருக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என்பதும் முக்கியமான வாக்குறுதியாகும். மேலும், அம்மா கேன்டீன் போல சமாஜ்வாதி கேன்டீன்களை அமைப்போம் எனவும் அவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

பிடிஏ கணக்கு!

இந்த வாக்குறுதிகள் பிடிஏ சமூகத்தினரை குறிவைக்கும் வகையிலேயே இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். அரசு ஒப்பந்தங்களில் 50 சதவீத ஒதுக்கீடு என்பது அந்த சமூகங்களில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு முக்கிய வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

அதாவது பாஜகவுக்கு எதிராக வெறும் அரசியல் விமர்சனங்களை மட்டும் முன்வைக்காமல்... சமூகநீதி, வேலைவாய்ப்பு, பொருளாதார பலன் ஆகிய மூன்று அம்சங்களையும் இணைத்து PDA வாக்குகளை தனது பக்கம் திருப்ப அகிலேஷ் திட்டமிட்டுள்ளார். அதற்காகவே அவர் திட்டம் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+