சூலூர் சிறுமி கொலை வழக்கு! "என் வீட்டு பெண்ணுடன் கார்த்தி தொடர்பில் இருந்தான்! A2 மோகன்ராஜ் பேட்டி
கோவை: "என் வீட்டு பெண்களுடன் உறவில் இருந்தான். அவனை பிடித்துக் கொடுத்ததே நான்தான்" என கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் ஏ2 குற்றவாளியும், ஏ1 குற்றவாளி கார்த்தியின் நண்பர் என சொல்லப்படும் மோகன்ராஜ் கோர்ட் வாசலில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சூலூர் சிறுமி கொலை வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படுவதால் அந்த வழக்கில் 2-ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மோகன்ராஜ், நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு போலீஸ் வேனில் இருந்தபடியே பேட்டி அளித்தார். அவர் கையெடுத்து கும்பிட்டபடியே கூறியதாவது: இந்த கேஸ் என் மீது பொய்யாக போட்டிருக்கிறார்கள். வழக்கில் தொடர்புடையதாக சொல்லப்படும் கார்த்தி, என் வீட்டு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளான். இதுதான் உண்மை. அவர் என் வீட்டில் இருந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவன் எனது நண்பன் என சொல்வது தவறு, தயவுசெய்து நண்பன் என சொல்லாதீர்கள். கார்த்தியை போலீஸுக்கு பிடித்துக் கொடுத்ததே நான்தான். எனக்கு கோர்ட்டில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் போராடிக் கொண்டிருக்கிறேன்" என மோகன்ராஜ் தெரிவித்திருந்தார்.
நடந்தது என்ன?
கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி கடந்த மே 21 ஆம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் திடீரென காணவில்லை. இதையடுத்து பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
மே22 ஆம் தேதி
இந்த நிலையில் கண்ணம்பாளையம் செல்லும் வழியில் குளக்கரை பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மே 22 ஆம் தேதி இரவு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோரும், உறவினர்களும் சிறுமி உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சூலூர் காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிரடி படை
இதையடுத்து அதிரடி படை போலீஸார் குவிக்கப்பட்டனர். கோவை மண்டல ஐஜி ரம்யா பாரதி, டிஐஜி சுவாமிநாதன் உள்ளிட்டோர் பேச்சுவாரத்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்தி என்ற 33 வயது இளைஞர் சிறுமியை தனது பைக்கில் அழைத்துச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து 23 ஆம் தேதி காலை அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த கார்த்தியை பிடித்து விசாரித்தனர்.
பாலியல் வன்கொடுமை
அப்போது அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதற்கு அவரது நண்பர் மோகன்ராஜ் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 21 நாட்களில் 39 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தீர்ப்பு தேதி மாற்றம்
முன்னதாக போலீஸிடம் இருந்து தப்ப முயன்ற போது கார்த்திக் கீழே விழுந்ததால் அவருக்கு வது கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோவை போக்சோ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்பேரில் இன்றைய தினம் மதியம் அவர்களுக்கு வழங்கப்படும் தீர்ப்பை அறிய பலரும் காத்திருக்கிறார்கள்.




Click it and Unblock the Notifications
