தமிழகத்தை உலுக்கிய கோவை சிறுமி பாலியல் கொலை.. நவம்பர் 16-ல் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. கடந்த திமுக ஆட்சி, அதற்கு முந்தைய அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை முக்கிய காரணமாக இருந்தது. ஆட்சிகள் மாறினாலும், மாறாத காட்சியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அதைத்தடுப்பதற்கு காவல்துறை தவறி வருகிறது. கோவை சூலூரில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் வருகிற 16 ஆம் தீர்ப்பளிக்கபடும் என்று கோவை போக்சோ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மே 10 ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றால். கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது தவெக. பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும், சிங்க பெண் பாதுகாப்பு படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார். மே 21 ஆம் தேதி தமிழகமே அதிரும் ஒரு சம்பவம் நடைபெற்றது. கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி மாயமானார்.

coimbatore-girl-sexual-assault-murder-case-pocso-court-to-deliver-verdict-on-november-16

கோவை சிறுமி பாலியல் கொலை

பெற்றோர், உறவினர், காவல்துறையினர் தேடினர். மே 22 ஆம் தேதி சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து,கொலை செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்தன. இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், மோகன் என்கிற இருவர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யததை வாக்குமூலம் அளித்தனர்.

அன்றைக்கு தொடங்கி தற்போதுவரை, கடந்த 6 மாத தவெக ஆட்சியில் ஏராளமான பாலியல் குற்றங்கள் அரங்கேறிவிட்டன. சிங்க பெண் படைக்கே பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்தார். பல்வேறு திருப்பங்களை சந்தித்த கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நவம்பர் 16 தீர்ப்பு

இந்த வழக்கில் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 221 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக, பல்வேறு சாட்சிகள் அடிப்படையில் வாதம், பிரதிவாதம் நடைபெற்றது. அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்தது. இந்நிலையில் வருகிற நவம்பர் 16 ஆம் தேதி சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று போக்சோ நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பை தமிழகமே உற்று நோக்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+