திமுக உறுதியா இருந்தா பாஜக கதை குளோஸ்.. தொகுதி மறுவரையறை திருமாவளவன் ஓப்பன் டாக்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெகவின் அரசியல் வருகை தமிக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகள் திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தீவிர பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்த திமுக அதிலிருந்து மாறி தவெக எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளது. இதற்கு திமுகவின் ஆதரவு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திருமாவளவன் பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நவம்பர் 27 ஆம் தேதியை முன்னிட்டு இன்று மாவீரர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஈழ விடுதலை பலியான அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு தரும்புரியில் நடைபெறுகிறது. அதில் நான் கலந்து கொள்கிறேன். நாளை 28 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் விசிக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

Delimitation Bill

பேரிடருக்கு சமம்

நாட்டில் தொகுதி மறுவரையறை கூடாது. 543 தொகுதிகள் அப்படியே 25 ஆண்டுகளுக்கு நிலையாக தொடர வேண்டும் என்பதை வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு தொகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். நாடாளுமன்ற கூட்ட தொடரில் தொகுதி மறுவரை மசோதவை நிறைவேற்ற பாஜக முயற்சி செய்கிறது. இதற்காக திமுக உள்ளிட்ட கட்சிகளிடம், பாஜக ஆதரவு கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்தியளவில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு முன்னோடி அரசியல் கட்சியாக திமுக உள்ளது. கடந்த காலங்களில் தொகுதி மறுவரையறையை திமுக கடுமையான எதிர்த்தது. கடந்தமுறை அந்த மசோதா தோல்வி அடைவதற்கு திமுக மட்டுமே காரணம். இந்த முறையும் அதை தோற்கடிக்க வேண்டும். இந்த மசோதா வெற்றி பெற்றால், நாட்டில் பாதிப்புகள் ஏற்படும். இது மோசமான பேரிடருக்கு வழிவகுக்கும். படிப்படியாக குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வந்துவிடுவார்கள்.

திமுக உறுதியாக இருந்தால்

ஆர்எஸ்எஸ் கனவு நினைவாகும். வரலாற்று பிழையை திமுக செய்ய வாய்ப்பில்லை. அதற்கு இடம் கொடுக்காது என்றே நம்புகிறேன். திமுக கடந்த முறை எடுத்த முயற்சியை போல இந்த முறையும் எடுக்கும் என நினைக்கிறேன். தொகுதி மறுவரை மசோதா தேசத்திற்கே ஆபத்தானது. நாடாளுமற்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்த தேவையில்லை. நாடாளுமன்றத்தில் 5 ஆண்டுகளில் 5 முறை பேசுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

ஏற்கனவே உள்ள 543 தொகுதிகளில் 50 சதவிகிதம் மகளிருக்கு கொடுக்க வேண்டும். அதற்கு 543 என்பது தொடர வேண்டும். இதில் திமுக நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. பாஜக அஜென்டாவை கொண்டு வர இந்த மசோதாவை கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் பலவீனத்தை பயன்படுத்தி இந்த மசோதாவை கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ், இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருந்தால், மேலும் திமுக எதிர்பில் உறுதியாக இருந்தால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+