டிசம்பர் மாத பலன் 2026: மேஷம் ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி.. இனி உங்க காட்டுல பண மழை தான்
December matha rasi palan: நவம்பர் மாதம் நிறைவடைந்து டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. மாதத்தின் ஆரம்பத்திலேயே நிழல் கிரகங்களான ராகு கேதுவின் பெர்ச்சியும் நடைபெறவுள்ளது. இது 12 ராசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, டிசம்பர் மாதத்தில் மேஷ ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வேலை, தொழில், குடும்பம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே ராகு கேதுக்கள் கும்பம், சிம்ம ராசியில் இருந்து மகரம், கடகத்திற்கு மாறக்கூடிய அமைப்பு 12 ராசிக்காரர்களுக்கும் சாதகமான அமைப்பைக் கொடுக்கும். மாதம் முழுவதும் சிம்மத்தில் குருவும், செவ்வாயும் மங்கள யோகத்தில் சேர்ந்திருப்பது நல்லவிதமான அமைப்பு. மருத்துவம், கட்டடம், நெருப்பு, விளையாட்டு, அதிகாரம் போன்ற தொழில்களைக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல வருமானங்கள் இருக்கும்.

குருவும், சுக்கிரனும் துலாம் வீட்டில் இருப்பது நன்மையைத் தரும். புதன் பகவான் குருவின் பார்வையில் டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருக்கும். அந்த வகையில், மேஷம் ராசியினருக்கு இந்த டிசம்பர் மாதத்தில் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கும் மாதமாக இருக்கும். குருவும், சுக்கிரனும் ராசியைப் பார்க்கின்றனர். ராசிநாதனும் குருவின் தொடர்பில் இருக்கிறார். 5, 9க்கு உடையவர்கள் வலுத்து இருக்கின்றனர். நிறைய நன்மைகள் கிடைக்கும் மாதமாக இந்த மாதம் அமையும். தோல்வி அடைந்த விஷயங்களில் வெற்றிகள் கிடைக்கும் அமைப்பு.
குரு சுக்கிரன் பார்வை
குரு, சுக்கிரன் பார்வையில் ராசி இருப்பதால் மனதில் தைரியம் ஏற்படும். எதையும் சமாளிக்க முடியும் என்கிற தன்னை ஏற்படும். முயற்சிகள் பழிக்கக்கூடிய நல்ல காலகட்டம். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். மிகப்பெரிய வருமானம், அதாவது 10 மடங்கு வரக்கூடிய யோகம் ஏற்படும். பணவரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் பெறுவீர்கள்.
திருமண யோகம்
5 ஆம் பாவகத்தில் குரு, 7 ஆம் பாவகத்தில் சுக்கிரன் மாதம் முழுவதும் இருப்பது பிள்ளைகள் சார்ந்த விஷயங்களில் மிகப்பெரிய நன்மைகளைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். 2027 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே வீட்டில் மங்களகரமான சப்தம் கேட்டும் சூழல் ஏற்படும். பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை செய்து பார்க்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.
லட்சியம் நிறைவேறும்
பிள்ளைகளுக்கு வேலை, தொழில், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் நன்மைகள் ஏற்படும். இளைய பருவத்தினருக்கு காதல் கைகூடக் கூடிய அமைப்பு, ஆண், பெண் உறவுள் நன்றாக இருக்கும். கூட்டு முயற்சிகள் பலிக்கக்கூடிய அமைப்பு உள்ளது. டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் 9 ஆம் இடத்தில் குருவின் பார்வையில் இருப்பதால் இதுவரைக்கும் இருந்து வந்த லட்சியங்கள் நிறைவேறும்.
அரசால் ஆதாயம்
கிடைக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் கிடைக்கும். அரசு லாபம் கிடைக்கும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications
