எந்த நாட்டின் பணத்திற்கு அதிக மதிப்பு.. லிஸ்டில் அமெரிக்கா இல்லை! எந்த நாடு தெரியுமா?
சென்னை: உலகிலேயே அதிக மதிப்பு மிக்க பணம் எதுவென்றால் அமெரிக்க டாலராகத்தான் இருக்கும் என்றும் மனதில் பலருக்கும் தோன்றும். சர்வதேச அளவில் வர்த்தகம், பணப் பரிமாற்றம் பெரும்பாலும் டாலரில் நடப்பதால் அந்த நாட்டின் டாலருக்கு அதிக மதிப்பு இருக்கும் என்று பலருக்கும் தோன்றும்.
ஆனால் உண்மையில் அமெரிக்க டாலரை விட அதிக மதிப்பு மற்றொரு நாட்டின் பணத்திற்கு உள்ளது. பிரிட்டனின் பவுண்ட் அல்லது யூரோவாக இருக்குமோ என்று கூட நினைக்கலாம். ஆனால் லிஸ்ட்டில் அதுவும் இல்லை. அதற்காக ஈரான் பக்கம் திரும்பிவிடாதீர்கள். உலகிலேயே பணமதிப்பு மிகவும் குறைவாக உள்ள நாடுகளின் லிஸ்ட்டில் தான் ஈரான் உள்ளது. சரி, இங்கே விஷயத்திற்கு வரலாம்.

அதிக பணமதிப்பு கொண்ட நாடு
உலகிலேயே அதிக பணமதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலில் இருப்பது குவைத்தின் தினார்தான். நாணயத்தின் மதிப்பு அன்னிய செலவணிக்கு ஏற்ப அவ்வப்போது லேசாக மாறுதலுக்கு உள்ளாகும். ஆனாலும் இன்றைய தேதிக்கு அதிக மதிப்பு கொண்ட நாணயமாக குவைத் தினார்தான் உள்ளது. ஒரு குவைத் தினாருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 300.13 ஆகும்.
அதாவது நம்ம ஊர் பணத்தில் 300 ரூபாயை கொடுத்தால்தான் குவைத்தின் ஒரு தினாருக்கு ஈடாக அமையும். அதே நேரத்தில் குவைத்தில் இருந்து 10 தினாருடன் வந்தால் நமது ஊர் பணத்தில் 3,000 ரூபாயாக மாற்றிக்கொள்ளலாம். அமெரிக்காவின் பண மதிப்புடன் இந்திய ரூபாயை மதிப்பிட்டால் ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 93.52 ஆகும். அதாவது இந்தியாவின் ரூ.93.52 தான் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகும்.
இரண்டாம், 3 ஆம் இடத்தில் எந்த நாடு
அமெரிக்க டாலருக்கு நிகரான குவைத் தினாரின் மதிப்பு 3.23 டாலர் ஆகும். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு பஹ்ரைன். அந்த நாட்டின் தினார் உலகின் இரண்டாவது மதிப்பு மிக்க நாணயமாக உள்ளது. ஒரு பஹ்ரைன் தினாரின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு என்று கணக்கிட்டால் 2.66 டாலர் ஆகும். இந்திய ரூபாயில் கணக்கிடால் சுமார் 255 ரூபாய் மதிப்பாக வரும்.
அதிக பண மதிப்பு கொண்ட நாடுகளின் லிஸ்டில் 3-வது இடத்தில் இருக்கும் நாடு ஓமன்.. அந்த நாட்டின் ரியால் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக கணக்கிட்டால் 2.60 டாலராக உள்ளது. இந்திய ரூபாயுடன் மதிப்பிட்டால் ஒரு ரியாலின் மதிப்பு தோராயமாக ரூ.249 ஆகும். அன்னிய செலவாணிகளுக்கு ஏற்றபடி இந்த தொகையில் சிறிய மாற்றம் இருக்கும். இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை வளைகுடா நாடுகளே பிடித்துள்ளது.
4 ம் இடத்தில் உள்ள நாடு
லிஸ்ட்டில் 4-வது இடத்தில் இருக்கும் நாட்டின் பணம் எதுவென்றால் ஜோர்டானின் தினார் ஆகும். ஜோர்டான் தினாரின் மதிப்பு டாலருடன் ஓப்பிடும் போது 1.41 டாலர் ஆகும். இந்திய ரூபாய்க்கு மாற்றினால் ரூ.135 ஆக உள்ளது. ஒரு ஜோர்டான் ரியாலின் மதிப்பு இந்தியாவின் 135 ரூபாய்க்கு சமம். ந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் பிரிட்டன் பவுண்ட், ஜிப்ரால்டர் பவுண்ட், ஸ்விஸ் பிராங்க், கேமன் தீவுகள் டாலர், யூரோ, அமெரிக்க டாலர் ஆகியவை உள்ளன.




Click it and Unblock the Notifications
