விமானம் ஒரு கிலோ மீட்டர் போக எவ்வளவு செலவு ஆகும்? ஃபிளைட் மைலேஜ் என்ன பாருங்க.. அசந்து போவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: விமானங்களில் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு மட்டுமின்றி கீழே இருந்து அதை அன்னாந்து பார்ப்பவர்களுக்கும் விமானங்களை பற்றிய பல சுவாரசியமான சந்தேகங்கள் எழுவது இயல்பு.. அதாவது, விமானம் எப்படி பறக்கிறது? நூற்றுக்கணக்கான பயணிகளுடன் அசால்ட்டாக வானில் பறக்கிறதே.. இது பறப்பதற்கு எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும் என்று பலரும் யோசித்து பார்த்து இருப்போம். அதற்கான விடையை இங்கே பார்க்கலாம்.

பொதுவாக ஒரு வாகனத்தை நாம் வாங்கினாலோ, புதிய மாடல் கார், பைக்குகளை சாலையில் பார்த்தாலோ.. விலைக்கு அடுத்தபடியாக நம் மனதிற்கு வரும் கேள்வி எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பதேயாகும். பைக் மட்டுமல்ல.. பஸ், லாரிகளை பார்த்தால் கூட இவை ஒரு லிட்டருக்கு எத்தனை கிலோ மீட்டர் போகும் என்பதுதான் பலருக்கும் தோன்றும்.

airplane to travel one kilometer Do you know the interesting facts

என்ன எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது?

இதற்கு விமானமும் விதி விலக்கு இல்லை.. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். விமானத்தை பொறுத்தவரை அதற்கென பிரத்யேக பெட்ரோலில் இயங்கக் கூடியது. இது கெராசினின் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு வடிவமாகும். இந்த எரிபொருள் உறையாமல் இருக்க சில ரசாயனங்களும் சேர்க்கப்படுகிறது. இதனால், வானில் குளிரான சூழல் ஏற்பட்டாலும் உறையாது. மைனஸ் 40 டிகிரி என்றாலும் கூட எரிபொருள் எந்தவித மாற்றமும் ஆகாது.

பொதுவாக விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் இந்த எரிபொருள் 'ஜெட் ஏ' இன்று அழைக்கப்படுகிறது. இந்த ஜெட் ஏ எரிபொருள் தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டர் ரூ.138-க்கு விற்பனையாகிறது. ஒரு விமானம் பறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் முதல் 12 ஆயிரம் லிட்டர் வரை எரிபொருள் தேவைப்படும். விமானத்தின் அளவு, வகைக்கு ஏற்ப இது மாறுபடும்.

ரூ.4 லட்சம் செலவு ஆகும்

இதை வைத்து பார்க்கும் போது போயிங் விமானத்தின் சிறிய வகை விமானம் ஒரு மணி நேரம் பயணிக்கிறது என்றால் எரிபொருளுக்கு மட்டும் தோராயமாக ரூ.4 லட்சம் செலவு ஏற்படும். விமானத்தை நினைத்த இடத்தில் நிறுத்தி எரிபொருள் நிரப்ப முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால், விமானத்தில் எரிபொருள் டேங்கும் பெரிய அளவிலானது ஆகும். போயிங், ஏர்பஸ் உள்ளிட்ட விமானங்களில் உள்ள எரிபொருள் டேங்கில் சுமார் 23 ஆயிரம் முதல் 27 ஆயிரம் லிட்டர் எண்ணெய் நிரப்பப்படும்.

மிகவும் அகலமான ஜெட் விமானங்களில் (போயிங்747) ஒரு மணி நேர பயனத்திற்கு 4,700 கேலன்கள் பயன்படுத்துகின்றன. ஒரு கேலன் என்றால் 3 லிட்டருக்கு சமம். அப்படி பார்த்தால் 14,700 லிட்டர்கள் தேவைப்படும். எனவே இந்த வகை விமானத்தின் ஒரு கேலன் எரிபொருளை கொண்டு சுமார் 0.14 மைல் (0.225 கிமீ) மட்டுமே பயணிக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+